Posts

Showing posts with the label கற்பெனப்படுவது...-கட்டுரை

கற்பெனப்படுவது....

கற்பெனப்படுவது.. கற்பெனப்படுவது ஓர் ஒழுக்கம். கட்டுப்பாடு. ஒரு விழுமியம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஒரு விழுமியமாகக் கடைபிடிக்கப்படும்போதுதான் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக கருதப்பட மாட்டாது. அந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருபாலாருக்கும் உரியதாக இருக்க வேண்டும். ஆனால் கற்பு என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்பது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அதனால்தான் கண்ணகியை கற்புக்கரசியாக்கிக் கொண்டாடும் இந்தச் சமூகம் ஆண்களில் ஒருவரை  இவர்தான் கற்புக்கரசன் என்று யாரையும் முன்னிருத்தவில்லை. அதற்கான அவசியம் இல்லை என்று நினைத்திருக்கலாம். " பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனுந் திண்மை உண்டாகப் பெறின்" என்கிறது குறள். கற்பு எனப்படும் பெருமைக்குரிய உறுதிப்பாடு மட்டும் இருக்குமானால் அதைவிட  சிறந்த பண்பு ஒரு பெண்ணுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது என்பது வள்ளுவர் கருத்து. கற்பெனப்படுவது பெண்களுக்கே உரிய சிறந்த பண்புகளுள் ஒன்று வள்ளுவரே சொல்லிவிட்டார். பிறகு என்ன? வள்ளுவர் வாக்கிற்கு மறு வாக...