கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு பேரும் புகழுமாய் வாழ வேண்டும். சீரும் சிறப்பும் பெற வேண்டும். பணம் மிகுதியாய்க் குவிய வேண்டும். பதவி வந்து அணி செய்ய வேண்டும். நிலபுலன்கள் வாங்கி குவிக்க வேண்டும். இவைதான் அனைவரின் ஆசையாக இருக்கும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஓடி ஓடி உழைக்க வேண்டும். உழைத்தால் பணக்காரன் ஆகிவிடலாமா? கூலித்தொழிலாளியும்தான் காலையிலிருந்து மாலைவரை வியர்வை சிந்த உழைக்கிறார். அவரால் பணக்காரர் ஆக முடிகிறதா? இல்லையே.... அப்படியானால் வெறும் உழைப்பால் பணக்காரன் ஆக முடியாது? வேறென்ன வேண்டும்? இதற்குப் பாரதிதாசன் ஒரு வழி சொல்கிறார் கேளுங்கள். "ஏழையையும் நல்ல பணக்காரன் ஆக்கும் படிப்பு" என்கிறார் பாரதி தாசன். பணக்காரன் ஆக வேண்டுமா? படியுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார் . பணக்காரன் என்ற ஒன்றை மட்டும் தரும் கல்வி. இது போதுமா? சீரும் சிறப்பும் தருவது கல்வி இல்லையா? பணக்காரன் உள்ளூர்விட்டு வெளியில் சென்றுவிட்டால்... யாருக்குத் தெரியும்? நாலுபேருக்குத் தெரிய வேண்டும். நல்லவர் மதிக்க வேண்டும். என்று சொன்னால் என்னவேண்டும். எது இருந்தால் ... எங்கே சென்றால...