Posts

Showing posts with the label அப்பா - செல்வாவின் சிறூகதை

அப்பா

அப்பா கல்லூரி வாசலில் ஆட்டோவை நிறுத்தினார் டிரைவர். "என்ன தம்பி...இடம் வந்துட்டா "என்றார் செல்லையா. "ஆமாம் ...நீங்க சொன்ன கல்லூரி வந்தாச்சு. இறங்குங்க..." தலையை வெளியில் போட்டு எட்டிப்பார்த்த செல்லையா",தம்பி சரியா பாத்தியா... என் மவன் படிக்கிற காலேஜ் இதுதான" "உங்கள் மவன் படிக்கிற கல்லூரி இதுவா.... அது எப்படி எனக்கு தெரியும்? நீங்க சொன்ன காலேஜ் இதுதான்...இறங்குங்க' "கொஞ்சம் பொறு தம்பி.. ஒரு நிமிஷம் .. இந்தபுள்ளைகளிடம் கேட்டு வாரேன்." "நான் அடுத்த சவாரி போகாண்டாமா? பணத்தை தந்து என்னை கட்பண்ணுங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே பெரியவர் கொண்டு வந்த வாழைக்குலையையும் குட்டிச் சாக்கு மூட்டையையும் எடுத்து கீழே வைத்தார் ஆட்டோ டிரைவர். "பொறு தம்பி...சாக்கை வேகமாக வைக்காத.. முறுக்கு  நொறுக்கிப் போயிடும்"என்றபடி படக்கென்று குட்டிச்சாக்கை வாங்கி தன் கால் பக்கத்தில்  மெதுவாக வைத்தார்.  இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப் பையை எடுத்து பணத்தை எடுத்தார். "எவ்வளவு பணம் சொன்ன...." "இருநூறு..." "பத்து நிமிஷத்துல க...