ஆசிரியப்பா வகைகள்
ஆசிரியப்பா வகைகள் நான்கு வகைப் பாக்கள் உண்டு. 1. வெண்பா 2. ஆசிரியப்பா 3. வஞ்சிப்பா 4. கலிப்பா நால்வகைப் பாக்களுள் ஆசிரியப்பா பற்றி இக்கட்டுரையில் காண்போம். ஆசிரியப்பா இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாக உள்ள ஒரு பா வகை என்றால் அது ஆசிரியப்பாகும்.ஆசிரியப்பாவில் கவிபாடுவது மிக எளிது. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்: அடிதோறும் நாற்சீர்களைப் பெற்றிருக்கும். இடையிடையே குறளடி, சிந்தடிகள் வருதல் உண்டு. ஆனால் முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும். அதாவது நான்கு சீர்கள் கொண்டவையாக இருக்கும். ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவல் ஓசை. அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது. ஒவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் அகவல் என்பதற்கான காரணம். ஆசிரியற்பாவினை அகவற்பா என்றும் அழைப்பர். முதலாவது ஆசிரியப்பாவில் சீர் எப்படி அமைந...