Posts

Showing posts from April, 2023

தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம் "இமிழ் கடல் சூழ் உலகெங்கும் போய் வாழ்ந்தாலும் எந்தமிழர் தமிழ் மொழியால் இணைந்து கொள்க" என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். கண்டம்தாண்டி கண்டம் வந்தாலும் மொழியால் ஒன்றுபடுவீராக என்பது பாவலரேறு அவர்களின் வேண்டுகோள். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள்  இல்லா நாடுகளே இல்லை என்னும்  அளவுக்கு உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் தமிழர்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்வைத்தேடி ... வாழ்வாதாரத்தைத் தேடி.. உலகெங்கும் பணத்திற்காக... பதவிக்காக ... குடியமர்ந்து விட்டோம். பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருக்கவும் முடியாது. . வீட்டை மறந்து நாட்டைத் துறந்து  உறவுகளை விட்டுவிட்டு அந்நிய தேசத்தில் வந்து குடியமர்ந்து விட்டோம். அழகான அந்நியமொழியோடு நம்மைப் பிணைத்துக்கொண்டு விட்டோம்.அவர்களோடு நம் பயணம் இனிமையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இருப்பினும் எங்கோ ஒரு நெருடல். எதையோ தொலைத்த ஒரு தேடல்.  எதோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற ஒரு வெறுமை. என்னவோ வேண்டும் என்ற ஓர் ஓட்டம்.நாட்டம்.இவையெல்லாம் மனதின் ஓர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு அப்பப்போ ...

போம்போது அவளோடு போம்

போம்போது அவளோடு போம்    வா என்றால் வராது  போ என்றால் போகாது உன் பேச்சு ' கா' இப்படி சிலர் முன்னுக்குப் பின்னாகச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக்கொண்டு திரிவர். இது போலவே முன்னுக்குப் பின்னான முரண்பட்ட   வரிகள்  கொண்ட பாடல் ஒன்று என் கண்ணில் பட்டது. "போம்போது அவளோடு போம் .............  .... ஆம்போது அவளோடு ஆகும்..." இதுதான்  அந்தப் பாடலில் நான் கண்ட முரண்பட்ட வரிகள் அவளோடு போம். அவளோடு ஆகும். மாறுபாடாகத்  தெரியவில்லையா? ஒரே ஆள். இருவேறு தொழில். யாரவள்? யாரோடு போகும்? யாரோடு ஆகும்? இருவரும் ஒருவர்தானா? இருவேறு ஆட்களா? இப்படி கேள்விக்கு மேல் கேள்விகள் வரிசைகட்டி வந்து நின்று என்னை துரத்தின. இப்போது எனக்குள்ளும் ஒரு மாறுபட்ட சிந்தனை. போகும் அவளை என்ன செய்வது? எப்படி அழைத்து வருவது? யாரைத் தூது அனுப்பலாம்? தூது போக ஆளின்றி துவண்டு நின்றேன். கையோடு அவளை அழைத்து வரும் ஆவலில் காண்போரிடம் கேட்டுத்தான் பார்க்கிறேன். கேட்பாரில்லை..... தூதுபோகவோ துணையாக வரவோ எவருக்கும் மனமில்லை. என்ன செய்யலாம்? வேறு வழியின்றி  தனிமையில் தவித்து நின்றேன். வழியெல்லாம் விழிய...

தாயே நீ பொறுமை இழந்ததேனோ?

தாயே நீ பொறுமை இழந்ததேனோ? தாயே நீ  பொறுமை இழந்ததேனோ? அல்லலும் பகலும்   ஆக்ரோசமாக முட்டி மோதிய அலையத் ஆசுவாசப்படுத்தி அமைதியாய்த் திரும்ப வைத்தாய்  ! துளைத்தபோதெல்லாம் துளியும் முணுமுணுக்காது துணை நின்றாய் தட்டியவரையும் வெட்டியவரையும் தாங்கி பிடித்தாய்! தடுமாறி விழுந்தவனைத் தாங்கி நின்றாய் தயை கொண்டு தாயாய் எமைத் தன்மடியில்  தூங்க வைத்து தூங்காது துணை நின்றாய்! பின்தூங்கி முன் எழும்பி முகவரி எழுதித் தந்து முழு மதியை வர வைத்து  முற்றமெங்கும் நடைக்க வைத்து  மெத்தனமாய் உலவ விட்டாய்! வேரால் துளைத்து வேதனை தந்தபோதும் விழுதாய் வீழ்ந்து பழுதில்லா மரமாய் வளர்ந்து வீசும் சாம்ராட் மாசில்லா மழலையின் மகிழ்ச்சி கொண்டாய்!   பாதசாரிகளுக்கு குடைபிடிக்கும் மரமாய் கரமாய் இருந்து  கடும் வெயிலில்  நிழலானாய்  அனல் தாக்கா  அரணானாய்!   வீசும் தென்றலை  முற்றம் எங்கும் எட்டிப் பார்க்க வைத்து முழு உலகமும் மூச்சு விட துணை நின்றாய்  எல்லார்க்கும் எல்லாம் என்னும் எழுதாத சட்டம் எழுதி வந்து  பொதுவுடைமைப் பேசி நின்றாய்! தாயென்று தரணி போற்ற ...

மனம் சிறியர் ஆவரோ?

மனம் சிறியர் ஆவரோ? " கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்." என்று சாதாரணமாக  சொல்லிச் சென்றுவிட்டார் ஔவை.   இப்போது என் மனதிற்குள் ஒரு ஐயப்பாடு. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்று சொல்லி விட்டார். யார் யாரெல்லாம்  சங்கைப் பார்த்திருப்பார்கள்? அதுவும் சுட்ட சங்கையும் சுடாத சங்கையும்  எங்கே போய் தேடுவது? எப்படி  ஒப்புமைப்படுத்திப் பார்ப்பது ? எது வெண்மை என்று எப்படி அறிந்து கொள்வது? அறிந்த ஒரு பொருளை உவமையாகக் சொன்னால் எளிதில் அறிந்து  கொள்ளமுடியும். அறியாத ஒன்றைக் கூறினால்  எப்படி விளங்கிக் கொள்வது? எல்லார் மனதிலும் இந்தக்  கேள்வி இருக்கும்.  ஆனால் யாரும் துணிந்து   கேள்வி கேட்டுவிடுவதில்லை.  நமக்கென்ன வீண் வம்பு என்று  அப்படியே ஒதுங்கிப்   போய்விடுவோம்.   வாசிப்பவர்  எதுவும் சொல்லாமல் அமைதியாகப் போய்விட்டால்... நமது எழுத்து வாசகர் மனதில்  எந்தத் தாக்கத்தையும்  ஏற்படுத்தவில்லை என்று பொருள். எழுத்தாளர் மனதில் இப்படி ஆயிரம் கேள்விகள் எழும். அப்படி எழுதியிருக்கலாமோ இப்படி எழு...

முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முடியுமா?

முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முடியுமா? முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முடியுமா?  அதெப்படி முடியும்? இந்தக் கதை எல்லாம் எங்களிடம் வேண்டாம். பொய்யைச் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தும்படியாகச் சொல்ல வேண்டாமா? என்று தானே கேட்கிறீர்கள். என் மனதிலும்  இதே கேள்விதான். ஆனால் இப்படியொரு பழமொழி ஏன் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது? ஒரு வேளை சின்ன பூசனிக்காயாக இருக்குமோ? அதெப்படி? ஒரு முட்டையை மறைத்து வைத்தாலே உள்ளேன் ஐயா என்று வெளியே பிதுங்கிக் கொண்டு வந்து நிற்கிறது. முட்டையைவிட சிறிய பூசனிக்காயை எங்கே போய் பறிப்பது? ஆனாலும் பழமொழி பழக்கமொழி  அல்லவா?  பழக்கமொழி முதுமொழி எப்படி  பொய்மொழியாகும்.    இல்லாத ஒன்று எப்படி நம் காதுகளுக்கு  வந்து சேரும்.?  பொருள் மாறுபாடு உருட்டல்  பிரட்டலாக வந்து சேர்த்திருக்கலாம்.   ஆனால் பூசனிக்காய் இருந்ததென்னவோ  உண்மையாகத்தான் இருக்கும்.   இந்தப் பூசனிக்காயை எப்படியாவது பறித்துவந்து பொரியல் செய்து உங்கள் முன் படைத்துவிட வேண்டும் என்று  வெகு நாட்களாக ஆசை. அதற்கான தேடுதல் வேட்டையில் இ...

கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்

கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்  அனைவருக்கும் கூற்றம் என்றால்  ஒரு நடுக்கம். கலக்கம். அச்சம். அந்தச் சொல்லைச் சொல்லாமலேயே கடந்து போய்விட வேண்டும் என்று நினைப்பர். நாம் நினைத்த நேரத்தில் வா என்றால் வருவதற்கும்  போ என்றால் போவதற்கும் கூற்றுவன் என்ன நாம் வைத்த ஆளா? அது யாருப்பா? கூற்றுவன்? நீ கண்டியா...என்று யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்.  ஊ..ஹூம் என்று உதட்டைச் பிதுக்குவர். எமனோடு சென்று திரும்பிய யாராவது திரும்பி வந்து சாட்சி சொன்னால்தான் எமன்  இருப்பதாக நம்புவோம். யாருக்கும் தெரியாத யாருமே பார்த்திராத   ஒருவர்மேல் ஏன் இந்த அச்சம்? ஏனிந்த கலக்கம்? கூற்றமாவது ...கூற்றுவனாவது? கூட்டி வா அவனைக் கையோடு... கூற்றுவனோடு ஒரு நேர்காணல் வைத்து அவன் கூற்றைக் கேட்க வேண்டும். தெருக்கூத்து இது என்று தெரியவைத்திட வேண்டும். இப்படியொரு வீறாப்போடு நடந்தேன். "யார் சொன்னது யாருக்குமே கூற்றம் தெரியாது என்று...? பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே இருட்டு என்பது போலல்லவா இருக்கிறது!" இப்படி ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். திருதிருவென விழித்தேன். என் உள்ளத்தை அப்படியே படித்தவர...

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு  பேரும் புகழுமாய் வாழ வேண்டும். சீரும் சிறப்பும் பெற வேண்டும். பணம் மிகுதியாய்க் குவிய வேண்டும். பதவி வந்து அணி செய்ய வேண்டும். நிலபுலன்கள் வாங்கி குவிக்க வேண்டும். இவைதான் அனைவரின் ஆசையாக இருக்கும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஓடி ஓடி உழைக்க வேண்டும். உழைத்தால் பணக்காரன் ஆகிவிடலாமா? கூலித்தொழிலாளியும்தான் காலையிலிருந்து மாலைவரை வியர்வை சிந்த உழைக்கிறார். அவரால் பணக்காரர் ஆக முடிகிறதா? இல்லையே.... அப்படியானால் வெறும் உழைப்பால் பணக்காரன் ஆக முடியாது? வேறென்ன வேண்டும்? இதற்குப் பாரதிதாசன் ஒரு வழி சொல்கிறார் கேளுங்கள். "ஏழையையும் நல்ல பணக்காரன் ஆக்கும் படிப்பு" என்கிறார் பாரதி தாசன். பணக்காரன் ஆக வேண்டுமா? படியுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார் . பணக்காரன்  என்ற ஒன்றை மட்டும் தரும் கல்வி. இது போதுமா? சீரும் சிறப்பும்  தருவது கல்வி இல்லையா? பணக்காரன் உள்ளூர்விட்டு  வெளியில் சென்றுவிட்டால்... யாருக்குத் தெரியும்? நாலுபேருக்குத் தெரிய வேண்டும். நல்லவர் மதிக்க வேண்டும். என்று சொன்னால் என்னவேண்டும். எது இருந்தால் ... எங்கே சென்றால...

ஈஸ்டர் வாழ்த்து

  ஈஸ்டர் வாழ்த்து கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது கிறிஸ்துவின் பிறப்பு. அந்த மாட்டுக்கொட்டில். கூடவே கிறிஸ்துமஸ் தாத்தாவும்  நினைவுக்கு வருவார். கிறிஸ்துமஸ் தாத்தா வருவார். பரிசுப் பொருட்கள் கொண்டு வருவார் என்று குழந்தைகள் தூங்காமல் காத்திருக்கும் நாட்களும் நினைவில் வந்து போகும். இவைமட்டுமா..?..கிறிஸ்துமஸ் என்றால்   கேக் இல்லாமலா...என்ற கேள்வியும் எழுகிறதல்லவா? வகைவகையான கேக் தயாரித்து  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வதில்தான் கிறிஸ்மஸ்  பண்டிகை கால மகிழ்ச்சியே இருக்கிறது . கிறிஸ்துமஸ் என்றால் கேக் .  பொங்கல் என்றால் கரும்பு.  தீபாவளி என்றால் விளக்கு.  ஹோலி என்றால் வண்ணம்.  இப்படி சில அடையாளங்களைக்  கொடுத்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக்  கொண்டிருக்கிறோம்.    ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது  எது என்றால் கிறிஸ்து கல்லறையில் இருந்து  உயிர்த்தெழுதல்  என்று சட்டென்று  சொல்லி விடுவோம்.  கிறிஸ்துமஸ் கேக் போலவே  ஈஸ்டருக்கும் ஏதாவது   ஒரு பொருள்  சிறப்பானதாக ...