மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது
மகிழ்ச்சிக்கான அளவுகோல் எது கொண்டாட்டங்களும் குதுகலமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பிறந்த நாளில் நாலுபேர் வாழ்த்திவிட்டால் அதில் மனம் மகிழ்ச்சியடைகிறது. விரும்பிய உணவுப் பொருளை வாங்கி உண்டுவிட்டால் .... கையை மணத்துப் பார்த்து பார்த்து மகிழ்கிறோம். உறவினர்கள் வீட்டிற்கு வந்துவிட்டால் விழுந்து விழுந்து உபசரித்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். தேர்வில் வெற்றிபெற்று விட்டால்... ஏதோ இமாலய சாதனை படைத்துவிட்டது போன்று துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும் ஊரில் மூன்று குடம் தண்ணீர் கிடைத்துவிட்டால்.... அதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறோம். புது சட்டை அணிந்துவிட்டால்.... நாள்முழுவதும் ஏதோ ஒரு மகிழ்ச்சி வந்து தொற்றிக்கொண்டு ஆகாயத்தில் மிதப்பது போன்று உணர்கிறோம். புதிதாக குளிர்சாதனப்பெட்டி வாங்கிவிட்டால்.... திறந்து திறந்து பார்த்து காற்றைத் குடித்து மகிழ்கிறோம். நாலு கிரவுண்ட் நிலம் வாங்கிவிட்டால்... வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய சாதனை புரிந்துவிட்டது போல நிலத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறோம். வாடகைவீட்டில் வாழ்ந்...