Posts

Showing posts with the label மடக்கு சொல்லணி என்றால் என்ன -அணியிலக்கணம்

மடக்கு சொல்லணி

மடக்கு சொல்லணி என்றால் என்ன பாடல்களுக்கு அழகைக் கொடுப்பது அணியாகும். அணி என்றாலே அழகு என்றே பொருள் தரும். அணிகள் பலவகை. பாக்கள் சொற்களால் ஆனதால் சொல்லணி சிறப்புடையதாகக் கருதப்படும். ஒரு சொல் வெவ்வேறு பொருளைத் தரும் சொல்லணியில்  மடக்கு சொல்லணி என்று ஒருவகை உண்டு.   ஒரு சொல்லோ, ஓர் எழுத்தோ மடங்கி வந்து பாவிற்கு அழகைக் கொடுத்து மெருகேற்றுவதால் மடக்கு சொல்லணி என்று அழைக்கப்படும்.  அதனை தண்டியலங்காரம் “ எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும் பெயர்த்தும் பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே”                       -   தண்டியலங்காரம்: 92                     பாவில் வரும் சொற்களில் உள்ள எழுத்துக்கள் இடையிலே பிரியாமலும் அதே சொற்கள் பிரிந்தும் வேறு வேறு பொருளைத்  தருமெனில் அது மடக்கு எனும் பெயர் பெறும் என்கிறது தண்டியலங்காரம். ஒருவர் ஒன்றைச்செய்வதற்கு ஏன் தகுந்த காலத்தை...