இக்கரைக்கு அக்கரை பச்சை
இக்கரைக்கு அக்கரை பச்சை இக்கரைக்கு அக்கரை பச்சை. அருமையான வாழ்வியல் உண்மையைச் சொல்லித் தரும் அனுபவமொழி. எப்போதுமே நம் கண்கள் அருகில் இருக்கும் பொருட்களைக் காணத் தவறிவிடும். தூரத்தில் இருக்கும் பொருட்களை நாடி ஓடும். இது கண்களின் குற்றம் அல்ல. இயல்பாகவே கண்களின் தன்மை அதுதாங்க. அழகான வீடு கட்டி இருப்போம். ஆனால் அடுத்த வீட்டுக் காரனுடைய வீடுதான் அழகாக இருப்பதுபோல் தோன்றும். தன் வீட்டில் எவ்வளவுதான் ருசியாக சாப்பிட்டிருந்தாலும் ஒருநாள் நண்பன் வீட்டில் தின்ற கடலை உருண்டை சுவையாகத் தெரியும். எந்தச் சேலை கட்டினாலும் பக்கத்து வீட்டுக்காரிக்கு நன்றாக இருக்கிறது... எனக்குதான் ஒரு சேலைகூட சரியாக வாய்க்க மாட்டேங்குது.... சொல்லி ...சொல்லி புலம்புவோம். பாவாடை சட்டை போட்ட காலத்தில் தாவணி போட்டுப் பார்க்க ஆசை வரும். தாவணிப் போட்டபிறகு எப்போது சேலை கட்டுவோம் என்று ஏக்கமாக இருக்கும். திருமணம் ஆகி வந்து விட்டால் எங்க அம்மா வீட்டுல...எங்க அம்மா வீட்டுல.... என்று ஆயிரம் முறை அம்மா வீட்டை நோக்கியே மனம் நாடி ஓடும். சிலருக்கு அடுத்த வீட்டுப் பெண...