உன்னால் முடியும்
உன்னால் முடியும் " நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் படி ஏறு" என்பார் மார்ட்டின் லூதர் கிங். ஆமாம் உன்மீது நம்பிக்கை வைத்து முதற்படியில் கால் வைத்தால் போதும். மீதிப் படிகளையும் ஏறி நீ சிகரம் தொட்டுவிடலாம். எத்தனைப் படிகள் என்பது முக்கியமல்ல. எப்படியும் நடந்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை மட்டும் போதும். என்னிடம் என்ன இருக்கிறது என்று எண்ண வேண்டாம். மரங்களைக் குடைய மரங்கொத்தி கோடாரி கொண்டு செல்கிறதா? இல்லையே...தனது ஒற்றை அலகை நம்பி வைரம் பாய்ந்த மரத்திலும் கூடு அமைந்துவிடுகிறது... நம்மால் மட்டும் கூடாதா என்ன? போராட வந்த பின்னர் புறமுதுகிட்டு ஓடலாமா? கழனியில் இறங்கிய பின்னர் சகதியாகிறது என்று காலைத் தூக்கலாமா? இருட்டினில் நடக்கும்போது கால் ஒலி கேட்கத்தான் செய்யும். மழையில் நடக்கும்போது குடை பிடித்தாலும் கால் நினையத்தான் செய்யும். கால் நனைகிறதே என்றால் வெளியில் செல்வதெப்போது? கரை சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் கப்பலில் ஏறுகிறோம். கடலில் கப்பல் கவிழ்ந்து விடுமோ என்ற ஐயம் ...