சங்க இலக்கியத்தில் நகைச்சுவை
சங்க இலக்கியத்தில் நகைச்சுவை நகைச்சுவையை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. நகைச்சுவை உணர்வு உள்ள ஒருவரால் மட்டுமே தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். " நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்" என்பார் வள்ளுவர். நகைச்சுவை உணர்வு இல்லாதவர்க்கு இவ்வுலகம் பகலும் இரவுபோல்தான் ஒளியற்றதாக இருக்கும் .அதாவது அவர்கள் வாழ்க்கையில் ஒருநாளும் மகிழ்ச்சி இருக்காதாம். நகைச்சுவை உணர்வு இல்லாதது அவ்வளவு கொடுமையானதா? நகைச்சுவைக்கு நம் வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை உண்டு. காந்தியடிகள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அதனால்தான்" நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்குள் இல்லை என்றால் எப்பொழுதோ நான் என் வாழ்க்கையை இழந்திருப்பேன்" என்று கடினமான தருணங்களைக் கடக்க உதவியது தன்னில் இருக்கும் நகைச்சுவை உணர்வுதான் என்று பதிவு செய்திருப்பார் காந்தியடிகள். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால் மட்டுமே கடினமான சூழல்களையும் எளிதாகக் கடந்து போகமுடியும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்காகவே படம் பார்ப்பவர்கள் ...