அம்மா சொன்ன அந்த வார்த்தை
அம்மா சொன்ன அந்த வார்த்தை காலையில் பள்ளிக்குச் செல்ல தயாராகும் நேரம். அம்மாக்கும் அப்பாவுக்கும் சண்டை. பெரிதாக சண்டைகள் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. அப்பப்போ சீசனல் சண்டை வரும். நிலக்கடலை சீசனில் நிலக்கடலை மூட்டைகள் விற்ற பணம் எங்கே? இப்படி ஒரு சண்டை கண்டிப்பாக இருக்கும். வற்றல் சீசனில் வற்றல் விற்ற பணம் எங்க போச்சு ? இந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது தங்கம் வாங்கி வருவீரா? இப்படியே தாறுமாறாக செலவழிச்சுட்டுதான் போவீரா? இப்படி ஒரு சண்டை நடக்கும். நாங்கள் யாரும் இந்தச் சண்டைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அன்றும் அப்படி ஒரு பிரச்சனைதான் ஓடிக் கொண்டிருந்தது. பாட அட்டவணையைப் பார்த்துப் பார்த்து புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்ததால் வேறு எதிலும் என் கவனம் செல்லவில்லை. ஆனால் அம்மா சத்தம் இடையிடேயே ஓங்கி வந்து காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. அப்பா எப்போதுமே சன்னமாகத்தான் பேசுவார். அதனால் அப்பா சத்தம் வெளியில் கேட்கவில்லை. "நான் செத்துருவேன். ...அப்போ இந்தப் பிள்ளைகளை வச்சுகிட்டு என்ன பண்ணுகிறீருன்னு பார்ப்போம்." என்ற அம்மாவின் குரல் என் காதுகளில் வந்து விழுந்தது. நான் எ...