குழலினிது யாழினிது...
குழலினிது யாழினிது.... " குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் குறள். : 66 குழல் _ புல்லாங்குழல் இனிது _ இனிமையானது யாழ் _ யாழ் என்னும் இசைக்கருவி இனிது _ இனிமையானது என்ப - என்று சொல்லுவர் தம் மக்கள் _ தமது மக்கள் மழலை _ குதலை , பால் மணம் மாறா பேச்சு சொல். _ மொழி , பேச்சு கேளாதவர் _ கேட்காதவர் தங்களுடைய குழந்தைகள் குழறும் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழாதவர்கள்தாம் பிறர் வாசிக்கும் புல்லாங்குழல் இசையையும் மிழற்றுகின்ற யாழிசையையும் இனிது என்று கூறி மகிழ்வர். இசை என்பது செவிக்கு இன்பம் ஊட்ட வல்லது. குழல் , யாழ் ஆகிய கருவிகளை மீட்டி எழும் இசை விலங்குகளைத் தன்வயப் படுத்தும் ஆற்றல் மிக்கதாகும். எத்தகைய இசைக்கருவியாலும் மீட்ட முடியாத இனி...