எண்ணிச் செய்க கருமம்
எண்ணிச் செய்க கருமம் காலம் அறிந்து இதனை நம்மால் செய்யக்கூடுமா என்று அறிந்து ஒரு செயலில் ஈடுபட வேண்டும். நற்செயல்கள் செய்தால் அதற்கான நற்பலன்கள் உண்டு. அது உடனே கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கான காலம் ஒன்று உண்டு. ஏற்ற காலம் வரும் .அதுவரை காத்திருங்கள். அப்படிக் காத்திருக்க மனமில்லாது போனால் கையில் இருப்பதையும் இழந்து ஏமாற்றமடைய நேரிடும். இதனை ஔவை அழகான ஒரு உவமையோடு புரிய வைத்திருக்கிறார். பாடல் இதோ உங்களுக்காக... " எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு வெண்பா : 4 கண் தெரியாத குருடன் ஒருவன் மாங்காய் அடிக்க முயற்சி செய்கிறான். என்னால் கூடுமா என்ற சிந்தனை அவனிடம் இல்லை. கால நேரம் தெரியவில்லை. கோலைக் கையாளும் திறனும் அவனுக்கில்லை. ஆனாலும் ஓர் ஆசை. கையில் வைத்திருந்த கோலை வீசுகிறான். அவன் எதை நோக்கியோ வீச அது எங்கேயோ போய் விழுகிறது. மாங்காய் மட்டும் விழவில்லை. இப்போது கையில் இருந்த கோலும் போயிற்று. இனி என் செய்வது? வழ...