Posts

Showing posts with the label நோய்நாடி நோய்முதல் நாடி....

நோய்நாடி நோய்முதல்நாடி.....

நோய்நாடி நோய்முதல் நாடி.... நோய்நாடி நோய்முதல் நாடி  அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் "                         குறள் :  948 நோய் - பிணி நாடி  -  இன்னது என அறிந்து நோய்முதல் - நோய்க்கான முதற் காரணம் நாடி - ஆராய்ந்து அது - அந்த நோய் தணிக்கும் -  தீர்க்கும் வாய் - வழி நாடி - அறிந்து வாய்ப்ப -  தவறாமல், பிழையில்லாமல் செயல் -  செய்க நோய் இன்னது என்பதை அறிந்து, அந்த நோய் வரக் காரணம் யாது என்பதை ஆராய்ந்து அதனைத் தணிக்கும் வழிகளைப் பிழை நேர்ந்துவிடாது உடலுக்கு பொருந்தும்படி செய்வீராக. விளக்கம் : முதலாவதாக ஒருவனது உடலில் ஏற்பட்டுள்ள நோய்க்கான அறிகுறிகளை வைத்து நோய் இன்னது என்பதைக் கண்டறிய வேண்டும். இரண்டாவதாக இந்த நோய் வருவதற்கான காரணம் என்ன ? என்னென்ன காரணிகள் இந்நோய் வருவதற்கு காரணமாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி விரிவாக  ஆராய்ந்து அறிய வேண்டும். மூன்றாவதாக மருத்துவத்தைத் தொடங்குவதற்கு முன்னர் ஒருவனுடைய ...