Posts

Showing posts with the label அவமானம் வேண்டாம் - கட்டுரை

அவமானம் வேண்டாம்

அவமானம் வேண்டாம்  கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும் செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே ஒரு சிலர் இருப்பர். அவருக்கு அது விளையாட்டாக இருக்கலாம். ஒருவரைப் பார்த்து நாம் செய்யும் கிண்டலும் கேலியும் அவர் உள்ளத்தை எவ்வளவு காயப்படுத்தும் .அவர் உள்ளம் எப்படி கூனிக் குறுகிக் போகும் என்பது காயப்பட்ட வருக்குத்தான் தெரியும். ஒரு சொல் வெல்லும் ஒருசொல் கொல்லும்" என்பார்கள். வெல்லும் சொல்லை விட்டுவிட்டு  கொல்லும் சொல்லைக் கையில் எடுத்துப் பேசுவதால் எத்தனை எத்தனை தற்கொலைகள் நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ வழி இல்லையே எனத்  தற்கொலை செய்து கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப் படுத்திவிட்டார்களே என்று தற்கொலை  செய்பவர்கள்தான் உலகில்  அதிகம். நான் என்ன அப்படி பெரிசாக சொல்லி விட்டேன். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டாரே என்பது சொல்லியவர்கள் தரப்பு வாதமாக இருக்கலாம். அவமானப்பட்டவர்களுக்கு அல்லவா தெரியும் அதன் வலியும் வேதனையும். அப்படியே நெஞ்சைப் பிடுங்கி வெளியே  வீசுவதுபோல் இருக்கும். உள்ளுக்குள்ளே கத்தியால் குடைந்து போல இருக்கும்.   பணம் இருந்தால்...