Posts

Showing posts with the label குறமகள் இளவெயினி -புறநானூறு

குறமகள் இளவெயினி

குறமகள் இளவெயினி  தமக்கு வேண்டியவர் தவறு செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு எத்தனை பேரிடம் இருக்கும்? வேண்டியவராகவே இருந்தாலும் தவறு செய்தால் வெட்டிவிட்டு ஓட நினைப்போம். பிறர் தவறு செய்தால்  அதற்காக நாம் வருந்துவோமா? இப்படி ஒரு தவறு நடந்து விட்டதே என்று வெட்கப் படுவோமா? எல்லா இடத்திலும் வீரத்தை வெளிக்காட்ட நம்மால் கூடுமோ? பிறர் செய்யும் தவறுக்காக  தான் நாணும் பண்பு எத்தனை பேரிடம் இருக்கும்? படைக்கலப் பணியில் வீரர்கள்  இருந்தால் போதும் என்று நினைக்காது தானும் அவர்களுக்கு இணையாக தன் திறமையைக் காட்டும் பண்பு  எத்தனை வேந்தரிடம் இருக்கும்? அவையில் பெருமிதத்துடன் நடந்து கொள்ளுதல் எல்லா மன்னர்களிடமும் இருக்குமா?  இவை எல்லாம் சாதாரணமாக யாரிடமும் இல்லாத  இயலாத பண்புகள். ஆனால்  பெருமக்களே! எம் அரசன் ஏறைக்கோன் இவை எல்லா பண்பும் ஒருங்கே பெற்றவன். ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக  ஒரு பெண்பாற்  புலவர் பாடலொன்று பாடியுள்ளார். யாரந்த புலவர் என்று கேட்கிறீர்களா? குறமகள் இளவெயினி தான் இந்த ஏறைக்கோன் பெருமைகளைப் பற்றிப்...