ஓணான் பனைமரம் ஏறுமா?
ஓணான் பனைமரம் ஏறுமா? ஓணான் பனைமரம் ஏறுமா? ஏன் ஏறாது.....பனைமரம் சொரசொரப்பானதாக இருக்கும் என்பதால் பனைமரத்தில் ஓணான் ஏறாது என்கிறீர்களா? பனை மரத்தில் ஓணான் ஏறியதைப் நானும் பார்த்ததில்லை. ஆனால் பனை மரத்தில் ஓணான் ஏறும் என்பதை நான் அடித்துச் சொல்லுவேன்.. ஓணான் பனைமரம் ஏறும்...ஏறும்...ஏறும். ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் ஒரு ஓணான் கணக்கு இருக்குதுங்க... அதில் ஓணான் பனை மரத்தில் ஏறிய கணக்கு ஒன்று இருந்தது. அது இன்றும் பசுமரத்தாணி போல என் நினைவில் பதிந்துள்ளது. பாடல் வேண்டுமா?இதோ உங்களுக்காக.... " முப்பத்தி ரண்டு முழம்உள முட்பனையைத் தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச். - செப்பமுடன் சாணேறி நான்கு விரற்கழியும் என்பரே நாணா தொருநாள் நகர்ந்து " என்று காரி நாயனார் கணக்கதிகாரம் என்ற நூலில் சொல்லியிருக்கிறாரே! இப்போவாவது ஓணான் பனைமரம் ஏறும் என்பதை நம்புகிறீர்களா? நம்மிபிட்டோம்ப்பா... நம்பிட்டோம். அது என்னவோ ஓணான் பாடல் என்றீர்களே அதற்கு என்ன ஆதாரம்? சபூத் சாயியே சபூத்? சபூத் சாயியே கியா சபூத்? ஆதாரம் வேண்டுமா? ஆதாரம் இல்லை என்றால் நம்பமாட்டீ...