அட்டாலும் பால் சுவையில் குன்றாது....
அட்டாலும் பால் சுவையில் குன்றாது.... பேச்சுத் துணைக்கு வருவதல்ல நட்பு. பிறர் பேசாது நம்மைப் பார்த்துக் கொள்வதுதான் உயர்ந்த நட்பு. துன்பம் வந்த காலத்து தொலைந்து போகும் நட்பு நட்புல்ல. சிலர் வலியவலிய வந்து நம்மோடு உறவு கொண்டிட நினைப்பர். நாமும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நம்பிவிடுவோம். அந்த நம்பிக்கையில் மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் சொல்லிவிடுவோம். வீட்டு நிலவரத்தை விலாவாரியாக சொல்லி வைப்போம். இது ஒருநாள் துன்பத்தில் வந்து முடியும். நமக்கு ஏதாவது துன்பம் வந்தபோது அந்த நட்பு காணாமல் போய்விடும். அல்லது நான் அப்பவே நினைத்தேன் என்று முதுகின் குச் பின்னால் தவறான முத்திரை பதிவு செய்துக்கொண்டு திரியும். பெரும்பாலான நட்புகள் இப்படித்தான் இருக்கின்றன. யாரும் நெருங்கிப் பழகிவிட்டால் அவர்களை நண்பர்கள் என்று எண்ணிவிடாதீர்கள். நட்புக்கான நற்பண்பு இல்லையா அவர் நண்பராக ஏற்றுக் கொள்ளாதீர்கள். பாலுக்கு என்று இயல்பாகவே ஒரு சுவை உண்டு. அது எவ்வளவு காய்ச்சி வற்றிப்போனாலும் அதன் சுவை கூடுமே தவிர குறைவு படாது. அதுதான் பாலின் இயல்பு. அதுபோல நெருக்கடி நேரத்திலும் ந...