மறந்தும் பிறன்கேடு சூழற்க..
மறந்தும் பிறன்கேடு சூழற்க மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு" குறள் : 204 மறந்தும் - நினைவொழிந்தும் பிறன் - அடுத்தவனுக்கு கேடு - தீமை, அழிவு சூழற்க - நினையாதொழிக சூழின் - நினைத்தால் அறம் - அறக்கடவுள் சூழும் - நினைக்கும் சூழ்ந்தவன் - எண்ணியவன் கேடு - கெடுதி, தீமை பிறனுக்குத் தீமை தரும் செயலை மறந்தும் செய்யாது ஒழிவீராக. மாறாக தீமையை மனதளவில் செய்வதற்கு நினைத்தாலும் அந்தத் தீமை ஒருநாள் நம்மிடமே திரும்பி வந்து சேரும். விளக்கம் : அடுத்தவர்களுக்குத் தீமை தரும் செயலை ஒரு போதும் செய்தல் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்தக் கேடு உங்களுக்கே திருப்பி வந்து சேரும். ஆதலால் மறந்தும் பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குத் தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அறக்கடவுள் உங்களைத் தண்டிப்பார். அந்தத் தண்டனையிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது. அறம் என்பது இறைவனின் ச...