அமைதி வேண்டி...
அமைதி வேண்டி.... அமைதி இல்லா உலகில் நிம்மதி இல்லை. நிம்மதி இல்லா மனதில் மகிழ்ச்சி இல்லை. அமைதி இருக்குமிடத்தில்தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அமைதி எப்போது வரும்? புயலுக்குப் பின் வருவதுதான் அமைதி. அப்படியானால் பெரும் போராட்டத்திற்குப் பின் வருவது அமைதி. அல்லது போருக்குப் பின் வருவது அமைதி என்றும் எடுத்துக் கொள்ளலாம். அமைதியை விரும்பாதோர் எவரேனும் உண்டோ! சாதி சண்டை .சமய இனக் கலவரங்கள். தனிமனிதப் போராட்டம். திரும்பிய பக்கம் எல்லாம் அமைதி இல்லா சூழ்நிலை. மக்களிடையே பகை.குடும்பங்களுக்கு இடையே பகைமை உணர்ச்சி. நாளை என்ன நடைபெறுமோ என்ற அச்சம். இப்படி திகிலும் பயமுமாக நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது. மனம் எங்கே அமைதி....எங்கே அமைதி என்று அல்லாடுகிறது. அமைதியைத் தேடி கோவில் குளம் என்று ஓட வைக்கிறது. குளம் என்றதும்தான் ஒன்று நினைவுக்கு வருகிறது. தெளிந்த நீராக கிடக்கும் குளத்தில் எவரேனும் இறங்கி கலக்கி விட்டால் ஒழிய தானாக குளத்து நீர் கலங்காது. யாரோ ஒருவர் கல்லை எடுத்து வீசி விட்டால் குளம் முற்றிலுமாகக் கலங்கிப் போய்விடும். அந்த...