Posts

Showing posts from November, 2020

பிரளயம் வருமா?

Image
                பிரளயம் வருமா? வழக்கத்திற்கு மாறான பெருவெள்ளம். பார்க்கும் இடமெங்கும் வெள்ளக்காடு. மழை ஓவென்று ஒப்பாரி வைத்து தன் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை. சிறுகுளங்கள் எல்லாம் உடைப்பெடுத்து ஊருக்குள் தண்ணீர் வந்துவிடுகிறது. அவ்வளவுதான் ஊர் முழுவதும் கூச்சலும் கூப்பாடுமாக மாறிவிடுகிறது. என்ன செய்வதெனத் தெரியாத பதற்றம். ஐயோ...ஜலப் பிரளயம் வந்து உலகம் அழியப் போகிறது போலிருக்கிறதே என்று ஆளாளுக்குப் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். இப்படிப்பட்டதான சூழ்நிலை பல நேரங்களில் நிகழ்ந்ததுண்டு. இப்போதே ஊர் அழிந்து போகக் கூடுமோ என அஞ்சி இருப்போம். எல்லாம் நான்கு நாட்கள்தான். அதன்பிறகு பிரளயம் வந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும். " பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள " என்ற சிலப்பதிகார அடிகள் பிரளயத்தால் குமரிக் கண்டம் காணாமல் போனதைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் பலமுறை இறைவன் பிரளயத்தை அனுப்பி உலகை அழிக்க முயன்றிருக்கிறார். ஆய...

பரியினும் ஆகாவாம்....

        பரியினும் ஆகாவாம்.... பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா நம் "                              குறள்  :   376 பரியினும் _வருந்திக் காப்பாற்றினாலும் ஆகாவாம் _ ஆக மாட்டாதாம் பாவல்ல _ ஊழால் அல்லாத, நமக்கு அல்லாத உய்த்து _  கொண்டு போய் சொரியினும் _ வீசி எறிந்தாலும் போகா _ நீங்காது தம் _ தமக்கு உரியவை நமக்கு உரிமை இல்லாதப் பொருட்களை எவ்வளவுதான் பாதுகாத்து வைத்தாலும் தங்காது. நமக்கு உரியவையைக் கொண்டுபோய்  தூர எறிந்தாலும் அது  நம்மை விட்டு அகலாது. விளக்கம் : வருந்திக் காப்பினும் ஊழால் நமக்கு இல்லாதவை நம்மோடு வந்து சேராது.நமக்கு நிர்ணயிக்கப்பட்ட எந்தப் பொருளையும் வேண்டாம் என்று தள்ளி விட்டாலும்  அது  நம்மைவிட்டு அகன்று போகாது. இதனைத்தான் ஊழ் என்பர். ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.  நமக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட  எந்தப் பொருளும் கிடைக்காமல் போகாது.  அதே நேரத்தில் நமக்கென்று விதிக்கப்படாத   எந்தப்...

மனிதநேயம்

            மனிதநேயம் " பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் " என்றார் வள்ளுவர். மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் உயிரோட்டமாக இருந்து இயக்கிக் கொண்டிருப்பது மனிதநேயம். மனிதம் இல்லா மனிதன் மனிதனே அல்ல... அவன்  மனிதனாகவே கருதப்படமாட்டான். மாக்கள் என்ற வரிசையில் வைத்து எண்ணப்படுவான்...இல்லை..இல்லை... விலங்குகள்கூட பல நேரங்களில் தம் இனத்துக்காகப் போராடி தங்களுக்கு மனிதநேயம் இருக்கிறது என மெய்பிக்கப் போராடும் காட்சிகளைக் நாம்  கண்டிருக்கிறோம். அதுவும் இல்லாத மனிதர்களை என்னவென்பது? மனித நேயம் என்றால் என்ன என்று கேட்டால் சக மனிதர்கள்மீது இரக்கம் காட்டுவது...அதாவது உயிர்கள்மீது கருணை காட்டுவது...என்பது எல்லோரும் சொல்லும் செய்திதான். அந்தக் கருணையும் இரக்கமும் உள்ளதால்தான் அன்னை தெரசாவையும் அப்துல் கலாமையும் காந்தியடிகளையும் மனிதநேயம் மிக்க மாமனிதர்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். விரல்விட்டு எண்ணும்படி...

மூளையைச் சுறுசுறுப்பாக வைப்போம்

Image
மூளையைச்  சுறுசுறுப்பாக வைப்போம் " இரும்பை பயன்படுத்தாவிட்டால் துருப்பிடித்துப் போகும். தேங்கிய நீர் தூய்மை இழந்துவிடும். அதேபோல் செயல்படாமை மனதின் சக்தியை உறிஞ்சிவிடுகிறது." என்பார்  லியர்னடோ டாவின்சி . நம் எல்லோரிடமும் கண்டிப்பாக ஒரு திறமை இருக்கும். எந்த ஒரு திறமையும் இல்லாதவர் என்று எவருமே கிடையாது. எந்த வேலையும் செய்யாமல் சோம்பி இருப்பவனை மூளை இல்லாதவன் என்று முத்திரை குத்தி ஒதுக்கி  வைத்துவிடுவோம். நன்றாக படிக்கிற ஒரு மாணவனைப் பார்த்து அவனுக்குச் செம மூளைப்பா...என்று  சொல்லி பெருமைப்படுத்துவோம். அப்படியானால் கடவுள் படைப்பில் பாரபட்சமா?  ஒருவருக்கு அதிக மூளையும் இன்னொருவருக்கு  குறைந்த அளவு மூளையும் வைத்து கடவுள்  படைத்துவிட்டாரோ என்ற ஐயம் எழுகிறதல்லவா! வேடிக்கையான ஒரு கதை ஒன்று  உண்டு. கடவுள் மனிதனை உருவாக்கி அழகு  பார்த்தாராம். கை, கால் ,மூக்கு ,கண் என்று ஒவ்வொன்றாக  சரியாக அதனதன் இடத்தில் வைத்து முழுமையான மனிதனை உருவாக்கினாராம். நல்லபடியாக உருவாக்கியாயிற்று  இனி வாழ்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பூமிக்கு அன...

அரம் போலும் கூர்மையரேனும்...

அரம்போலும் கூர்மைய ரேனும்.... " அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்  "                           குறள்.  :  997 அரம் _ ஒரு ஆயுதம் போலும் _ போன்ற கூர்மையரேனும் _கூர்மையுடைய அறிவுள்ளவராயினும் மரம் _  ஓரறிவுள்ள மரம் போல்வர் _  போன்றவர் மக்கட் பண்பு _ மனிதப் பண்பாடு இல்லாதவர் _  இல்லாமல் இருப்பவர் அரம் போன்று கூர்மையான அறிவுடையவராக இருப்பினும் அவரிடத்து மனிதப்பண்பு  இல்லாதிருந்தால் அவர் மரத்திற்கு  ஒப்பாகவே கருதப்படுவார். விளக்கம் :  அறிவுடையவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக மனித ஒழுக்கமான  பண்பாடு இருத்தல் வேண்டும். பண்பாடு இல்லை என்றால் எந்த அறிவு பெற்றிருந்தாலும் அதனால் பயனில்லை. அவனுடைய அறிவு அழிவை நோக்கியதாகவே  இருக்கும். அறிவு ஆக்கத்தற்கு வழி  வகுப்பதாக இருக்க வேண்டும். நல்ல சமுதாயம் அமைய பண்பாடுள்ள  நல்ல மனிதர்கள் வேண்டும். கூர்மையான அறிவு சமூகத்தைக் கூர்தீட்டி விடாது. அறிவு என்பது சமூக வளர்ச்சி  சார்ந்ததாக இருக்க வேண்டும். பண்...

பாவ் பீச் விழா

Image
                    பாவ் பீச் விழா பாவ் பீச் என்பது மராட்டியம் முதலான வடஇந்திய மாநிலங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தீபாவளி நாளின் ஐந்தாம் நாள் கொண்டாட்டமாக பாவ் பீச் விழா நடைபெறுகிறது. நரகாசுரன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் இந்திரலோகத்து மன்னன் இந்திரனை வென்று சொர்க்கபுரியைக் கைப்பற்றி கொண்டான். அது மட்டுமல்லாமல் அங்கிருந்த பதினாராயிரம் பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றான். தேவேந்திரன் தாயானான அதிதி அணிந்திருந்த மந்திரக் கம்மலையும் எடுத்துச் சென்றுவிட்டான். இப்போது தேவர்கள் அனைவரும் தங்களை காக்கும்படி மகா விஷ்ணுவிடம் ஓடிச் சென்று தஞ்சம் அடைகின்றனர். இந்த நரகாசுரனின்  ஆணவத்தை அடக்கி எம்மையும் மக்களையும் காக்க வேண்டும் என்று  மன்றாடி கேட்டுக் கொள்கின்றனர். தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக விஷ்ணு  பகவான் நரகாசுரனை அழிக்கிறார். பெண்களையும் தாய் அதிதியின் மந்திரக் கம்மலையும் மீட்டு வருகிறார். நரகாசரன் அழிந்த மகிழ்ச்சியைத்தான் தீபாவளியாகக் கொண்டாடி வருவது யாவரும் அறிந்த ஒன்று....

தீபத் திருநாள்

Image
              தீபத் திருநாள் தீபாவளி என்றாலே  அகல் விளக்கு நம் கண்முன் வந்து நிற்கும். தீபத் திருநாள் ... தீபத் திருநாள் என்று ஊர் எங்கும் ஒரே விளக்கு மயம். கண்கள் கூசுகின்றன. எவ்வளவு விளக்குகள்... எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம். மகிழ்ச்சியின் வெளிப்பாடா? தீபத் திருநாளில்  இவ்வளவு தீபங்கள் ஏற்றுவதற்கு காரணம் ஏதேனும் உண்டா? நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் விழாக்களைக் கொண்டாடுவதில்லை. இதற்கும் ஒரு காரணம் இல்லாமலா போய்விடும். தீபம் ஏற்றிக் கொண்டாடப்படுவதின் வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும்.இப்படியும் நடக்குமா என்று கேள்வி கேட்க வைக்கும். கொண்டாட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. மாற்றுக் கருத்து இல்லை. ஏதோ ஒரு துன்பத்திலிருந்து விடுபட்டுவிட்டோம். மனது குதுகலிக்கிறது. அப்பாடா...என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிவருகிறது. யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும் என்று கண்கள் யார் யாரையெல்லாமோ தேடுகிறது. அந்த மகிழ்ச்சிப் பரிமாற்றத்திற்கான வடிகால் தான் விழாக்களும் கொண்டாட்டங்களும் என்ற நம்பிக்...

மௌனம் பேசும்

மௌனம் பேசுமா?  வாய் திறந்து பேசுவதுதானே பேச்சு...  மௌனம் எப்படி பேசியிருக்க முடியும்...  மௌனம் இதுவரை பேசியதும் இல்லை  பேசப் போவதும்  இல்லை.  இது நமது கணிப்பு.    பேசிய வார்த்தைக்கு ஒரு அர்த்தம்.  பேசாத வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தம்  கற்பிக்கப்படும்.    ஒருவரோடு சண்டை போடும்போது எதிராளி  அமைதியாகப் போய்விட்டால்...  அதற்கு எதிராளி தாழ்ந்து போய்விட்டார்.  தனது இயலாமையை ஒத்துக் கொண்டு  பேசாமல் போய்விட்டார் என்று நினைப்போம்.  அல்லது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று  போயிருப்பாரோ என்று நினைப்போம்.    இன்னும் நான்கு பேரைக் கூட்டி வருவதற்காக  சென்றிருப்பாரோ...  என்ன நடக்கும் என்று பார்ப்பதற்காக ஆவலோடு  காத்திருப்போம்.  அதுவும் நடக்கலியா... ஏதோ வன்மம் வைத்துக்  கொண்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்று  புரிந்து கொள்வோம்.  அதுவும் இல்லையா...எதுக்குமே லாயக்கில்லாதவர்  என முத்திரை குத்திவிட்டு நம்போக்கில்  போய்க் கொண்டே இருப்போம்.  அதுவும் இல்லையா....

இடுக்கண் வருங்கால் நகுக....

இடுக்கண் வருங்கால் நகுக.... " இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தி ல் "                           குறள் : 621 இடுக்கண்  -  துன்பம் வருங்கால் -  வரும்போது நகுக  -  சிரித்து ஒதுக்கி விடுக அதனை - அத்துன்பத்தை அடுத்தூர்வது _  நெருக்கிப் போராடவல்லது அஃதொப்பது - அதைப் போல்வது இல் _  இல்லை துன்பம் வரும்போது கலங்காமல் சிரித்து விடுதல் வேண்டும். அத்துன்பத்தை நெருக்கி எதிர்த்து வெல்லும் திறன் கொண்டது அதைப் போன்றது வேறு ஒன்றுமில்லை. விளக்கம் : துன்பம் வரும்போது அதை எண்ணிக் கலங்காது மகிழ்ந்திருக்க வேண்டும்.அத்துன்பத்தை மென்மேலும் வளரவிடாமல் தடுக்க வல்லது அந்நகுதலைத் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. துன்பம் வரும் போது சிரிக்க வேண்டுமா... வேடிக்கையாக இல்லை. துன்பம் வரும்போது அழுகைதான் வரும். சிரிப்பு எப்படி வரும். முரண்பாடான கருத்தாக உள்ளதே என்ற எண்ணம் ஏற்படும். துன்பம் நேரிடும்போது அதையே நினைத்து வரு...

ஏழு எழுபதுமுறை

    ஏழு எழுபதுமுறை போஸ்ட்....என்ற போஸ்ட்மேனின் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்தேன்.          போஸ்ட்மேன் கவரைக் கையில் கொடுத்து விட்டுத் திரும்பு முன்னே வீட்டுக்குள்  துள்ளிக் குதித்து ஓடிப்போய் அம்மா முன் நின்றேன். "அம்மா... எனக்கு வேலை கிடச்சிருக்கு..." " எங்க..எங்க... காட்டு" ஓடி வந்து கையில் இருந்த கவரைப் பிடித்து இழுத்தாள் தங்கை. "போ...  ...போ ...அம்மா...வான்னா..." சத்தம் போட்டபடியே அம்மா இருக்கும் இடத்திற்கு வந்தேன். " ஏன் கத்துற... முதலாவது கவரை பிரிச்சிப் பாரு...அதற்குமுன்  எதுக்கு ஆர்ப்பாட்டம் பண்ணுரா...." சாதாரணமாகச் சொல்லிவிட்டு கடந்துபோனார் அம்மா. "வா  ...வா.. எங்கே போற.....என் கிட்ட இரு." அம்மாவை வலுக்கட்டாயமாக இழுத்து பக்கத்தில் அமர்த்தி வைத்துவிட்டுக் கவரைப் பிரித்தேன். அப்படியே தூக்கிவாரிப் போட்டது. "ஆ....என்ன இது ....இன்டர்வியூக்கு வரச் சொல்லி இருக்கு" " எங்கிருந்து.. வந்திருக்குது.... அதைச் சொல்லு முதல்ல" முந்திரிக்கொட்டையாட்டும் முன்னே வந்து நின்று கேள்வி கேட்டாள் தங...

தீயவை தீய பயத்தலால்....

  தீயவை தீய பயத்தலால்.... " தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் "                              குறள்  :  202 தீயவை- தீயச் செயல்கள் தீய _  துன்பங்கள்  பயத்தலால் _ தருவனவாக இருத்தலால் தீயவை _ தீயச் செயல்கள்  தீயினும் _  நெருப்பை விடவும்  அஞ்சப்படும் _ அச்சம் தருவதாகும் தீயச் செயல்கள் துன்பங்களை  மட்டுமே தருவதால் அத்தீயச் செயல்களானது நெருப்பைவிடவும் மிகவும் அச்சம் தருவதாகும். விளக்கம் :  தீயானது தொட்டவரைச் சுட்டுவிடும். தான் இருக்கும் இடத்தில் அதனுடைய வெப்பத் தாக்கம் அதிகமாக இருக்கும். எந்த நேரத்தில் தீ ஏற்பட்டதோ அந்த  நேரத்தில் மட்டுமே தீயால் ஏற்படும் பாதிப்பு இருக்கும். நேற்று ஏற்பட்டது என்றால் நேற்றோடு அதன் கதை முடிந்தது. ஆனால் தீயச் செயல்கள் அப்படிப்பட்டவை அல்ல. காலத்திற்கும் ஒருவருடைய மனதில் காயத்தை ஏற்படுத்திவிடும். அருகில் இருந்தால் மட்டுமே தீயச் செயல்கள் நம்மை வந்து சேரும் என்பதல்ல. ஒருவன் செய்யும் தீய செயல்  எவ்வளவு தொலைதூரத்தில் இருந்த...

தெய்வத்தான் ஆகா தெனினும்....

  தெய்வத்தான் ஆகா தெனினும்... " தெய்வத்தான் ஆகா  தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் "                               குறள்  : 619                               தெய்வத்தான் _  கடவுளால் ஆகாது _ ஆக முடியாது எனினும் _ என்றாலும் முயற்சி _  முயற்சி செய் தால் தன் _ தனது மெய் _ உடம்பு வருத்த _  வருந்தி உழைத்த கூலி _ சம்பளம், பலன் தரும்_ கொடுக்கும் ஒரு செயல் ஊழ்வினை காரணமாக முடியாமல் போனாலும் விடாமுயற்சியோடு உடம்பு வருத்தி உழைத்த உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் போகாது. விளக்கம் : விதியின் காரணமாக சில நேரங்களில் கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல் தடைபடலாம். அதற்காக முயற்சி செய்வதை விட்டுவிடக்கூடாது. உடல் வருந்த உழைப்பவனுக்கு அதனால் கிடைக்க...

வண்ணப்பெட்டி

Image
                  வண்ணப்பெட்டி வண்ணப்பெட்டியைத் தலையில்  வைத்துக்கொண்டு அலுங்கமாமல்  குலுங்காமல் நடந்து சென்றாள் சந்திரா. தலையில் வண்ணப்பெட்டியை வைத்து சுமந்து செல்வது ஏதோ கிரீடத்தை தலையில் வைத்துச் சுமந்து செல்வது போன்ற நினைப்பு. கூடவே அம்மாவும் சின்ன தங்கை  சுமதியும் நடந்துவர திருவிழாவில் ஊர்ந்து செல்லும் ரதம்போல மெதுவாக நடந்து சென்றாள் சந்திரா. இடையிடையே... "கல்லு தட்டிராம....பார்த்துப்போ" என்று அம்மா டைரக்ட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். "ஏய்...ஏய்...மாடு வருது...ஒதுங்கு...ஒதுங்கு..." தங்கை சுமதி குரல் கொடுத்தாள். போதாததற்கு அம்மா ஓடிவந்து பெட்டியைப் பிடித்துக் கொண்டார்கள். "கையை எடுங்கம்மா...நான் கீழே போடமாட்டேன்.." சொல்லிப் பார்த்தாள் சந்திரா. "ஒண்ணும் இல்லை நட...நட.."என்றார் அம்மா.. எதிரே வந்த...தங்கம்.... "என்ன பாட்டி கலியாண வீட்டுக்கா... மெதுவா....பார்த்துப் போங்க...ஆடுமாடு வருகிற நேரம் சின்னப்பிள்ளை கீழேப்போட்டு முறுக்கு உடைத்துடப் போகுது "என்று கரிசனமாகச் சொல்லி விட்டுச் சென்றார். அவ்வளவுதான்  இன்னும் க...

பொய்மையும் வாய்மை யிடத்த....

Image
பொய்மையும் வாய்மை யிடத்த.... " பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் "                            குறள்  :  292 பொய்மையும் _ பொய்மையும் வாய்மை  _ உண்மை இடத்த _ தன்மையுடையது    புரை _  குற்றம்  தீர்ந்த _ நீங்கிய  நன்மை _ நல்லது  பயக்கும் _ பயன்தரும்  எனின் _  என்றால் குற்றமற்ற நன்மையைத் தருவதாக இருந்தால் உண்மை சொல்ல வேண்டிய இடங்களில்  பொய்யும் கூறலாம். விளக்கம் :  பொய் சொல்லவே கூடாது என்று ஒழுக்கங்களை  வலியுறுத்திச் சொல்லும் வள்ளுவர் பொய் கூறலாம் என்கிறார். தவறான கருத்தாக இருக்கிறதே என்று தோன்றலாம். "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்று வாய்மைக்கு இலக்கணம் வகுத்துத் தந்த வள்ளுவர் அடுத்த குறளிலேயே பொய்மையும் வாய்மையிடத்த என்று கூறிவிட்டார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் ?  வள்ளுவர் புரட்டி புரட்டிப் பேசுபவர் அல்லர். விதிக்கு  விதிவிலக்காக இந்தக் குறளைக் கூறி இருப்பாரோ என்று முற்றில...

நான் வேலைக்குப் போறேன்

நான் வேலைக்குப் போகிறேன் "எனக்கு வேலை கிடைத்திருக்கிறது... எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .." பங்கஜத்திற்கு தனது மகிழ்ச்சியை யாரிடமாவது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது. மெதுவாக கதவைத் திறந்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தாள் பங்கஜம் ... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையுமே காணவில்லை. "சே...இன்றைக்குப் பார்த்து ஒரு சின்ன  குழந்தைகூட தெருவில் இல்லை."  சலித்துக் கொண்டபடி வீட்டுக்குள் சென்று  நாற்காலியில் அமர்ந்தாள்.    நாலு நிமிடம்கூட தொடர்ந்து அமர்ந்திருக்க  முடியவில்லை.  மறுபடியும் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தாள். தொலைவில் ஒரு பெரியவர் தோளில் மண்வெட்டியோடு வந்துகொண்டிருந்தார். என் நேரம்....மண்வெட்டி தான்  குறுக்கே வருது. என் கிரகம் இப்படியா  இருக்கணும்.? பல்லை நறநறவென்று கடித்தபடி கதவில் கையால் குத்தினாள். ஐயோ...என் தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறதே.....மெதுவாக வீட்டிற்குப் பின்னால் இருக்கும் தொழுவத்தில் குச் சென்றாள். அங்கு தூணில் கட்டிப் போட்டிருந்த கன்றுக்குட்டி யின் முதுகை மெதுவாகத் தடவியபடி" அக்கா நாளையிலிருந்து எனக்க...

நெடுநீர் மறவி மடிதுயில்....

நெடுநீர் மறவி மடிதுயில்..... நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் "                        குறள்  :  605 நெடுநீர் _ காலம் தாழ்த்துதல் மறவி   _  மறதி மடி  _  சோம்பல் தூக்கம்  _  பெருந்தூக்கம் நான்கும் _ நாலும் கெடுநீரார் _ கெட்டுப்போகும் தன்மை உடையவர் காம _  விரும்பி கலன் _ அணி, மரக்கலன் காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், பெருந்தூக்கம் ஆகிய இந்த நான்கும் கெட்டுப்போகும் இயல்புடையவர் விரும்பி ஏறிச் செல்லும் மரக்கலனாகும். விளக்கம் :  நாளை நாளை என்று காலம் தாழ்த்தி ஒரு செயலைச் செய்யாது நீர்த்துப் போகச் செய்தல் அச்செயலைச் செய்ய  விருப்பமின்மையைத்தான் காட்டுவதாக இருக்கும். மறந்து போய்விட்டது...மறந்து போய்விட்டது என்று எதுவுமே செய்யாமல் இருப்பது ஆர்வம் இல்லாமையால் நிகழும் நிகழ்வாகவே இருக்கும். சோம்பல் முட்டைக் கட்டி மூலையில் முடங்க வைத்துவிடும்.சோம்பேறியால் எதுவும் செய்ய முடியாது. சோம்பலில் முடங்கிக் கிடந்தால்  பெருந்தூக்கம் பெருங்கரம் நீட்டி அணைத்துக் கொ...