Posts

Showing posts with the label புலி கிடக்கும் வீடு - மூதுரை

புலி கிடக்கும் வீடு

புலி கிடக்கும் வீடு " மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்" என்பார் வள்ளுவர். மனைவி மாண்புடையவளாக இருத்தல் வேண்டும். நற்பண்பு இல்லாத மனைவி வாய்த்தால் .... அவ்வளவுதான். குடும்பம் குடும்பமாக இராது. எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனைவி வீட்டில் இருந்தால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? செல்வமும் புகழும் இருந்து  என்ன பயன்? வீட்டில் அமைதி இல்லையே! எல்லாம் இருந்தும் அமைதி  இல்லை என்றால்  ஒன்றுமில்லாது போன்ற   வெறுமையைத்தான் உணர முடியும்.   வெளியில் சென்ற கணவனுக்கு   வீடு திரும்ப  மனம் வராது.  மனைவியோடு பேசவே அச்சம் ஏற்படும்.  எந்த நேரத்தில்   சண்டையிட்டுக் கொள்வாளோ   என்ற அச்சத்தோடே   வாழ்க்கை நடத்த  வேண்டியிருக்கும்.    ஏறு போல் பீடு நடை எப்போது வரும்? பணத்தால் வருமா? பதவியால் வருமா? புகழால் வருமா? இவை எதுவாகவும் வருவது இல்லை. நமது புகழைக் காக்க விரும்பும் மனைவி அமைந்தால் மட்டுமே ஏறுபோல் பீடு நடை நடக்க முடியும்.  அனைவருக்கும் நல்ல மனைவி  வாய்க்க...