Posts

Showing posts with the label ஒட்டா ஒருமதி கெட்டாய் -ஔவை

ஒட்டா ஒருமதி கெட்டாய்

ஒட்டா ஒருமதி கெட்டாய்  போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம்.      ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன.      ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக  போட்டி போட்டுக் கொள்கிறான்.       தான்தான் பெரியவன் என்பதைக்  காட்டிக் கொள்வதற்காக  போட்டி போடுகிறான்.      போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு....  இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு.  ஆனால்    அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று நமக்கு அறிவுரை கூறும் பெருமதியாளரிடமும்  பொறாமை காணப்படும்போது அது சற்று  நம்மை  அதிர்ச்சி அடையத்தான் வைக்கிறது. இப்படியும் இருப்பார்களா என்று வியக்க வைக்கிறது. நகைக்க வைக்கிறது. சற்றே சிந்திக்க வைக்கிறது. யாரிந்த போட்டியாளர்கள்? புலவர்கள்தான். புலவர்களிடையே அப்படி என்ன போட்டி? புலமையை மெய்ப்பிப்பதில் முந்தி நிற்பது நீயா நானா  என்பதுதான் போட்டி.  குறை கண்டு பிடிப்பதிலேயே  சிலர் குறியா...