Posts

Showing posts with the label நாகாக்க-தன்னம்பிக்கை கட்டுரை

நாகாக்க

Image
நாகாக்க  காக்க ....காக்க...நாவைக் காக்க.. அதென்ன நாவைக் காக்க...  நாவைக் காக்க முப்பத்து இரண்டு  காவலாளிகள் இருக்கின்றனரே... போதாதா?  இன்னும் வேறு எத்தனை காவலாளிகள்   போட்டு காக்க வேண்டும்?   " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்   சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"   என்கிறார் வள்ளுவர். எதைக் காக்காவிட்டாலும் நாவைக்  மட்டுமாவது காத்துக்கொள்ள வேண்டும். அப்படி காத்துக் கொள்ளாதிருந்தால் தவறான சொற்களைப் பயன்படுத்திவிட்டு துன்பப்பட நேரிடும்.  ஓர் ஊரில்  ஒரு  கழுதையும்  ஒரு நரியும் நண்பர்களாக இருந்து வந்தன.  கழுதை பகல் முழுவதும் பொதி சுமக்கும்.  இரவு வந்ததும் தன் நண்பன் நரியோடு   சேர்ந்து வெள்ளரித் தோட்டத்தில் புகுந்து   வெள்ளரிக்காய்களைத் திருடித் தின்னும்.   ஒருநாள் இரவு திருட செல்லும்போது கழுதை தன்னைப் பற்றி நரியிடம்  பெருமையாகப் பேசிக் கொண்டே வந்தது. " நான் நன்றாக பாடுவேன்...கேளேன்..." என்றது கழுதை. "நீ வாயைத் திறந்தாலே கொடூரமாக இருக்கும்.   நீ பாடப் ப...