Posts

Showing posts with the label பிச்சைக்கு மூத்த குடி-நல்வழி

பிச்சைக்கு மூத்த குடி

பிச்சைக்கு மூத்தகுடி " இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்"  என்றார் வள்ளுவர். இவ்வுலகில் சிலருக்கு இரந்து உயிர்வாழவேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால், அவனும் இரப்பவரைப் போல் அங்குமிங்கும்  அலைந்து கெட்டொழிந்து  போவானாக என்று  இறைவன்மீதே வள்ளுவர்  கோபப்பட்டு எழுதிய பாடல் இது.  பிச்சை எடுத்து வாழ்தல்  அவ்வளவு இழிவானதா? ஏன் இல்லை... இழிவானது தான். இதுதான் வள்ளுவரின் ஆணித்தரமான கருத்து. நம் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் பிழைப்புக்கு ஏதும் வழியில்லை என்றால்  என்ன செய்ய்ய முடியும்? உழைக்கக் திறன் இருந்தும் இரந்து வாழ்வது வெறுக்கத்தக்கது. தவறான செயல். ஆனால் உழைக்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள்  என்ன செய்ய முடியும்? இரந்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படியொரு நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்? படைத்தவனை அன்றி வேறு யாரை குறை சொல்ல முடியும்.? வெறுமனே குறை சொல்லிவிட்டு கடந்து போக வள்ளுவருக்கு மனம் வரவில்லை. ஏன் இப்படிப் படைத்தாய் என்று கேள்வி கேட்கிறார். இவர்கள் இரந்து வாழ்வதற...