வாசித்தலை நேசியுங்கள்
வாசித்தலை நேசியுங்கள் " கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு " கற்று விட்டேன் என்ற கர்வம் வேண்டாம். நாம் கற்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ உள்ளன. யாரும் நான் எல்லாம் படித்து முடித்துவிட்டேன் என்று சொல்லிவிட முடியாது. "நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் கல்வி " என்றார் வள்ளுவர். நீர்மட்டம் உயர உயர ஆம்பல் தண்டு உயர்ந்து கொண்டே இருக்கும். அதுபோல நாம் கற்கும் நூலின் அளவுக்கு ஏற்ப நமது அறிவு கூடும். ஆதலால் படியுங்கள் என்பது வள்ளுவர் பரிந்துரை. ஆசிரியர்கள் எல்லாம் படித்தவர்கள் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் நாளும் படித்து தமது அறிவை மேருகேற்றிக் கொண்டே இருப்பவர்தான் நல்ல ஆசிரியராக இருக்க முடியும். படித்த ஆசிரியரைவிட படிக்கின்ற ஆசிரியர்கள் மாணவர்களைக் காலத்திற்கு ஏற்ப உருவாக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பர். ஆதலால் ஆசிரியர்களே படியுங்கள் என்கின்றனர் கல்வியியலாளர்கள். அரைமணி நேரம் பாடம் நடத்த ஆறுமணி மணி நேரமாவது படித்தல் வேண்டும் . கூர்த்தீட்டப்படாத ஆயுதம் துருபிடித்து பயன்படுத்த லாயக்கற்றுப்...