Posts

Showing posts with the label குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை -கட்டுரை

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை""  அருமையான பழமொழி. ஒருவருடைய குற்றத்தைப் பார்க்கத் தொடங்கினால் அவருடைய குற்றம் மட்டுமே கண்களுக்குத் தெரியும். அவர் அதுவரை செய்த நன்மைகள்,  நல்ல செயல்கள் எதுவுமே  கண்களுக்குத் தெரியாமலே போய்விடும். எல்லாவிதத்திலும் குறையில்லாத மனிதன் ஒருவனைக் காட்டு என்றால் யாராலேயும் யாரையும் காட்டிவிட முடியாது. ஒரு சாரார் நல்லவர் என்று சொல்கிற ஒரு நபர் இன்னொரு சாராரால் தீயவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறார். நன்மை தீமை என்ற இருவேறு கண்ணோட்டம் எல்லோரிடமும் உண்டு. ஒரே நபர் இருவேறுவிதமாக சித்திரிக்கப்படுகிறார். குற்றமில்லாத ஏசுநாதரும் குற்றஞ்சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். நாம் இறைவனாகப் பார்க்கும் ஒருவர் இன்னொருவர் பார்வையில் தீயவராகத் தெரிகிறார். இதுதான் உலகம். மகாபாரதத்தில் இந்தப் பழமொழிக்கு அருமையான ஒரு தீர்வைச் சொல்லித் தருவார் தருமர். கௌரவர்கள் சபையில் பாஞ்சாலியை  இழுத்து வந்து மானபங்கப்படுத்த முயன்ற காட்சி . இந்த நிகழ்வு பஞ்ச பாண்டவர்களைக் கொதிப்படையச் செய்கிறது. தருமரைத் தவிர மற்ற நால்வரும் பழிக்குப் ...