போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை
போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை வெகுநேரமாக தரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன இது சற்று புடைத்துக்கொண்டு... வெகுநேரம் வரை எனது கண்கள் வேறு எங்கும் நகர வில்லை. ஒருவேளை ஏதாவது புழுவாக இருக்குமோ? மறுநாளும் அதே இடத்தில் வந்து உட்கார்ந்தேன் மண் இன்னும் கொஞ்சம் புடைத்திருந்தது. பக்கவாட்டு மண் சற்று விலகி காற்றுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு போராட்டம் நடக்கிறது. ஒரே நாளில் மண்ணை முழுவதும் அப்புறப்படுத்த முடியவில்லை என்று தெரிந்தது. சற்று மண்ணை விலக்கிப் பார்ப்போமா என்ற எண்ணம். வேண்டாம் எதுவாக இருந்தாலும் தானாகப் போராடி வெளியே வரட்டும். அதனை அதன் போக்கிலேயே விட்டுவிடு. மனம் தடுத்தது. மறுநாள் மெதுவாக தளிர் தலைதூக்கி எட்டிப்பார்த்தது. அதன் தண்டு கூனிக்குறுகி வளைந்து நெளிந்து நிமிர முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. ஓரிரு நாட்களில் தண்டின் போராட்டம் முடிந்து கம்பீரமாக இரண்டு இலைகளைக் தாங்கி நான் ஜெயிச்சுட்டேன் என்று சொல்லுவது போல் மலர்ச்சி தந்தது. விதையின் போராட்டம் செடியாக வெளிவந்திருக்கிறது. இதுவரை தான் போராட்டம்.. அப்பாடா...என்று நிம்ம...