பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்...
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் " குறள் : 580 பெய - ஊற்றுதலை கண்டும் - பார்த்தும் நஞ்சுண்டு- நஞ்சினைக் குடித்து அமைவர் -அமைதியாய் இருப்பர் நயத்தக்க - விரும்பத்தக்க நாகரிகம்- உயர்ந்த பண்பு வேண்டுபவர்- விரும்புபவர் விரும்பத்தக்க நல்ல நாகரிகம் கொண்டவர் தன்னுடன் பழகியவர் நஞ்சினை இடுவதைப் பார்த்த பின்னரும் அதனைத் தான்உண்டு அமைதியாக இருப்பர். விளக்கம்: பழகியவர் எது செய்தாலும் மறுப்பு சொல்லாமல் செய்யும் பண்பு சிலரிடம் இருக்கும். இது அவர் மீது நாம் கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கையின் வெளிப்பாடு. அவர் எந்தத் தீங்கும் செய்யமாட்டார் என்று அவர் பேரில் வைத்திருக்கும் நல்லெண்ணம். ஆனால் எல்லா நேரங்களிலும் நண்பர் நல்லவராக இருப்பார் என்று நம்ப முடியாது. சில நேரங்களில் அவர் உள்ளம் நமக்கு எதிரான சிந்தனை கொண்டிருக்கலாம். நமக்கு எதிரான தவறான செயல்களில் ஈடுபடுபவராக இருக்கலாம். நம் கண்முன்னே நஞ்சினை ஊற்றித் தருகிறார் நண்பர். நம்மில் எத்தனைபேர் அதனை வ...