அம்மா வேணும்
அம்மா வேணும் அம்மா... அம்மா கூப்பிட்ட படியே வீட்டுக்குள் நுழைந்தான் ரவி. புத்தகம் பையை கட்டிலில் வைத்தபடி, "...பசிக்கும்மா..சோறு போடு" அவசரப்டுத்தினான். அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை . "போம்மா.. நான் உன்கூட பேச மாட்டேன் " கோபமாக பேசியபடி முழங்கால்களுக்குள் தலையைப் புதைத்தபடி திண்ணையில் போய் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டான் ரவி எவ்வளவு நேரம் இருந்திருப்பான் என்று தெரியவில்லை. அப்படியே தூங்கி கீழே சரிந்து வீழ்ந்தான். திடீரென்று எழுந்து பார்க்கிறான். இன்னும் அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார். இப்போது மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல். இவ்வளவு நேரம் அம்மா தூங்க மாட்டார்களே! மெதுவாக சந்தேகம் வந்து எட்டிப் பார்த்தது. ஒருவேளை...அப்படி இருக்குமோ? அப்படியானால்...நான் நான்... அந்த நினைப்பு வந்ததும் கைகால்கள் எல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தன. அச்சம் வந்து அவனை அம்மாவை நெருங்க விடாமல் தள்ளி நிற்க வைத்தது. சே...இருக்காது. இருக்கவும் கூடாது. வேலைப்பளுவில் அசந்து தூங்கி விட்டார் அவ்வளவுதான். ஆனாலும் இந்த அம்மா பொல்லாதவர். கதவு நிலையைப் பிடித்துக்கொண்டு அம்மாவையே முறைத்துப் பார்த...