இரவு நடத்தும் நாடகம்
இரவு நடத்தும் நாடகம் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து கிடந்து அண்ணாந்து பார்க்கையில் பஞ்சான மேகங்கள் துஞ்சாமல் ஓட்டம் காட்டும் _ மேகங்கள் துஞ்சாமல் ஓட்டம் காட்டும்.! கொஞ்சமாய் ஒளி சிந்தி கஞ்சமாய் சிரித்து மிஞ்சும் நேரத்தில் விஞ்சும் மொழி பேசி கொஞ்சித் துயில் கெடுக்கும் _ விண்மீன்கள் கொஞ்சித் துயில் கெடுக்கும்.! ஊதக் காற்றும் உரசி என்றன் காதோடு ஊமைக் கதைகள் பேசி உள்ளம் குளிர உறவாடி நடுங்க வைக்கும் _ காற்று உறவாடி நடுங்க வைக்கும்.! கார்மேகம் தேடி கண்கள் ஓடுகையில் வெற்று உடம்பைக் காட்டி சற்றும் கள்ளம் இல்லை சொல்லாமல் சொல்லி நிற்கும் _ வானம் சொல்லாமல...