செல்வம் நிலையில்லாதது
செல்வம் நிலையில்லாதது இருந்து சம்பாதித்தேன். பறந்து போய்விட்டது" என்பது போலத்தான் பணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். கைக்குக் கைமாறிக் கொண்டே இருக்கும். அதனால்தான் அதற்கு நாணயம் என்ற பெயரும் வந்ததோ ?என்ற ஐயமும் உண்டு. ஒரு செல்வந்தர் இருந்தார். இருக்க நேரமில்லாது ஓடி ஓடி உழைத்தார். பணம் பணம் என்று பணத்தின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்ததால் வேறு எந்தப் பக்கமும் அவரது கவனம் திரும்பவில்லை. நல்ல காரியங்கள் எதுவும் செய்ய நேரமில்லை.பிறகுப் பார்த்துக் கொள்ளலாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எந்த தான் தர்மமும் செய்யவில்லை. பணம் என்ன நிரந்தரமாகவா ஒருவரிடம் நிற்கப் போகிறது? ஒருநாள் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கையிலிருந்த பணமெல்லாவற்றையும் இழக்க நேரிட்டது. கையில் ஒன்றுமில்லை அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கடனாகக் கேட்கலாம் என்றால் யாரும் முகத்தை எட்டிக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.இப்போதுதான் அவருக்கு உலகம் புரிய ஆரம்பித்தது. பணமில்லாதவன் பிணம் என்று தெரிந்து கொண்டார். உன் வாயையும் பணப்பையையும் கவனமாகக் திற. அப்போதுதான் இரண்டிற்கும் மத...