Posts

Showing posts with the label குறளும் குயிலும்

காக்க காக்க சினம் காக்க...

Image
                  காக்க காக்க சினம் காக்க... கரடி ஒன்று மலை அடிவாரத்தில் வசித்து வந்தது.  கரடிக்கு நாவல் பழங்கள் சாப்பிடுவது என்றால்  கொள்ளைப் பிரியம்.   மலையில் நிறைய நாவல் மரங்கள் நின்றன. நாவல் பழங்களைப் பறித்துவயிராற  தின்பதற்காக மலையின்மேல் ஏறியது. நாவல் மரத்தைக் கண்டதும் மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறித்துத் தின்றது. "எவ்வளவு சுவையாக இருக்கின்றன. மலையில் கிடைக்கும் பழங்களுக்கே தனி சுவைதான்" உண்ட மயக்கத்தில் நாவல் மரத்தின்கீழ் படுத்து  சற்று ஓய்வு எடுத்துக் கொண்டது கரடி. இப்போது மறுபடியும் கரடி மனதில் ஒரு  பேராசை எழுந்தது. "மலை உச்சிக்குப் போனால் நல்ல தேன் கிடைக்குமாம். இன்று எப்படியாவது தேன் குடித்துவிட்டுத்தான்  திரும்ப வேண்டும்"  தேன் என்று நினைக்கும்போதே   நாவில் எச்சில் ஊறியது.   தேன் உண்ணும் ஆசையில் மலை உச்சியை  நோக்கி நடக்க ஆரம்பித்தது கரடி. மலைக்கு மேலே ஏற ...ஏற ...பனிப்பொழிவு காரணமாக மரக்கிளைகள் எல்லாம் பருத்தி மூட்டையைத் தூவிப் போட்டது போல் காட்சி அளித்தன. ...

நிற்க அதற்குத் தக

Image
                    நிற்க அதற்குத் தக குளக்கரையில் கொக்கு ஒன்று வெகு நேரமாக ஒற்றைக் காலில் தவமிருந்து கொண்டிருந்தது. சாயங்காலம் வரை தவம் இருந்ததுதான் மிச்சம். ஒரு மீன்கூட அகப்படவில்லை. " எத்தனை நாளைக்குதான் இப்படி காத்திருந்து காத்திருந்து...  பட்டினியால் சாவது." வருந்தியது கொக்கு. "என்ன செய்யலாம்? .".யோசித்தது. " நீச்சல் கற்றுக் கொண்டால் மட்டும்தான் இனி உயிர் வாழ முடியும்." நீந்த கற்றுக்கொள்ள வேண்டுமானால் ....  யாரிடம் போவது?  எப்படி கற்றுக்கொள்வது?  என்னால் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா ? "  இப்படி ஏதேதோ எண்ணங்கள் வந்து குழம்பி நின்றது கொக்கு.  திடீரென்று மண்டைக்குள்  ஒளிக்கீற்றாய் ஓர்  எண்ணம் உதயமாக, "இப்படி செய்தால் என்ன ?  அதுதான் இப்போது சரியான வழி...." என்று நினைத்துக் கொண்டு நேரே தன் நண்பன் எருமையைத் தேடி போனது. எருமை தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் நிழலில் படுத்து நன்றாக அசை போட்டுக் கொண்டிருந்தது. " நண்பா...."மெதுவாக குரல் கொடுத்தது  கொக்கு.  "அடடே.....

பொறாமை

                      பொறாமை சேவற்கோழி ஒன்று வயல்வெளியில் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது.     தொலைவில் பெட்டைகோழிகள் சில இரை தேடிக் கொண்டிருந்தன.     அவற்றோடு ஒப்பிடுகையில் சேவலின் தோற்றம் சற்று கம்பீரமாக தெரியும்.     நான் தான் அழகு என்று கொண்டையைக் கொண்டையை ஆட்டும் சேவல்.              நாளும் ஒரு தடவையாயாவது தன் அழகைப்பற்றி   தம்பட்டம் அடிக்காவிட்டால் சேவலுக்கு தலையே வெடித்துவிடும் போல் இருக்கும்.         இன்றும் அந்த பெருமையோடு  வயலைச் சுற்றி ச்சுற்றி வந்தது சேவல்.   தொலைவில்...      அங்கே...யாரது?     நம்பவே முடியவில்லையே.     எத்தனை அழகு? எத்தனை  அழகு? கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது  சேவல்.    தன்னைவிட  அழகான   ஒருவர் நம்ம ஏரியாவில் இருக்கலாமா?    கூடாது...

முற்பகல் செய்யின்

Image
                                      முற்பகல் செய்யின் காகம் ஒன்று மாமரத்தில் கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.இந்தக் கூட்டிலேயே முட்டைகளும் இட்டு குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தது.     ஒரு நாள் எங்கிருந்தோ வந்த குட்டிக் குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.         காகத்தின் கூடு ஒன்று மரத்தில் இருப்பதைக் கண்டதும் உற்சாக மிகுதியால் கூடுதல் ஆட்டம் போட்டது.         தாவித்தாவி கூட்டிற்கு அருகில் சென்றது. கூட்டினுள் எட்டிப் பார்த்தது.  கூட்டினுள் யாரும் இல்லை.          யாரும் இல்லாத போது விளையாடினால் என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது ? சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்து.          அப்போது எதிரில் நிற்கும் ஒரு ...