Posts

Showing posts with the label பலாப்பழக் கணக்கு- கணக்கதிகாரம்

பலாப்பழத்தை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்

பலாப்பழத்தை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்  மா , பலா , வாழை முக்கனிகள்  என்று சொல்லும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மேலிடும்.  மூன்றுமே அனைவருக்கும் பிடித்தமான பழங்கள் தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.  இதில் பலாப்பழம் என்றாலே நாவில் தேனூறும். பலாப்பழம் தொலைவில் இருக்கும்போதே நான் இங்கு இருக்கிறேன் என்று நமக்கு மணத்தைத் தூதாக அனுப்பி  நம்மை அழைக்கும்.  கால்கள் அந்த இடத்தைவிட்டு  நகர மறுக்கும். கண்கள் எங்கே பலாப்பழம்? எங்கே பலாப்பழம் ? என்று ஆலாய்ப் பறக்கும். இதுதான் பலாப் பழத்துக்கான சிறப்பு. இப்படிப்பட்ட பலாப்பழத்தை என்ன விலை கொடுத்தேனும் வாங்கி வந்து சாப்பிட ஆசை. வாங்கி வந்தாயிற்று. பழத்தை வாங்கி வந்து வெட்டிப் பார்த்தால் உள்ளுக்குள் சுளையையே காணோம். பூந்தியுள் கையைப் போட்டுத்  துழாவித் துழாவிப் பார்த்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐம்பது சுளை கூட தேரவில்லை. அப்படியே ஏமாந்து போயிருப்போம். இந்த வியாபாரி என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார்  என்று  வசைபாடிவிட்டு பூந்தியை எடுத்து வழித்து நக்கி  நமது பலாப்பழ ஆசையைத் தீர்த்துக் கொள்ள வே...