உரமொருவற்கு உள்ள வெறுக்கை....
உரமொருவற்கு உள்ள வெறுக்கை... " உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு " குறள். : 600 உரம் ,_ வலிமை, அறிவாற்றல் ஒருவற்கு _ ஒருவனுக்கு உள்ள _ ஊக்கம் வெறுக்கை _ மிகுதி அஃது _ அது இல்லார் _ இல்லாதவர் மக்கள் _ மாந்தர் ஆதலே _ ஆகுதலே வேறு _ வேறுபட்டது ,பிறது ஒருவனுக்கு வலிமையாவது ஊக்கம் மிகுதியே ஆகும்.ஊக்கம் இல்லாதவர்கள் பார்ப்பதற்கு மனிதர்கள் போல காணப்பட்டாலும் உண்மையில் மரத்திற்கு ஒப்பானவரே ஆவர். விளக்கம் : ஒருவனுக்குப் பலம் என்பது ஊக்க மிகுதியே ஆகும். அந்த ஊக்கம் இல்லாதவர் மக்களாகவே கருதப்படமாட்டார். மக்களாக இருத்தல் என்பது வேறு . மக்கள் என்று சொல்லப்படுபவர் மனத்தால் இயங்குபவர். வெறும் காலால் இயங்குபவர் மனிதர் அல்லர். மரங்களுக்கும் உயிர் உண்டு. ஆனால் இயக்...