பிச்சைக்கு மூத்தகுடி...
பிச்சைக்கு மூத்தகுடி.... "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" "இவ்வுலகில் சிலருக்கு இரந்து உயிர்வாழவேண்டிய நிலையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால், அவனும் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக "என்று கோபமாக எழுதியிருப்பார் வள்ளுவர். பிச்சை எடுத்து வாழ்தல் இழிவானது. இதுதான் நம் அனைவரின் கருத்தாக இருக்கும். ஆனால் பிழைப்புக்கு ஏதும் வழியில்லை என்றால் என்ன செய்ய்ய முடியும்? உழைக்கக் திறன் இருந்தும் இரந்து வாழ்வது வெறுக்கத்தக்கது. தவறான செயல். ஆனால் உழைக்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்ன செய்ய முடியும்? இருந்துதான் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படியொரு நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார்? படைத்தவனை அன்றி வேறு யாரை குறை சொல்ல முடியும்.? வெறுமனே குறை சொல்லிவிட்டுக் கடந்து போக வள்ளுவருக்கு மனம் வரவில்லை. "ஏன் இப்படிப் படைத்தாய்?" என்று கேள்வி கேட்கிறார். இவர்கள் இரந்து வாழ்வதற்கு நீதானே காரணம் ...அப்படியானால் அதற்கான தண்டனை உனக்கும் உண்டு. தண்டனையிலிருந்து நீயும் தப்ப முடியாது. நீயும் அவர்களைப்போல அலைந்து திரிந்து க...