Posts

Showing posts with the label பிறந்தநாள் வாழ்த்து-கவிதை

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து ஆசிரியருள் மாணிக்கமாய் அனைவரின் அன்புக்குரியோனாய் மாணவரின் கனவு நாயகனாய் மாண்பமை மதியாளனாய்  மட்டில்லா மொழியறிவாளனாய் தெற்றில்லா தமிழ்க்களனாய் வெற்றுமொழி பேசா ஞானியாய் தேய்வில்லா மதியாளரானாய் வாழும் செல்வகணேசன் செவியில் கவியோதி செந்தமிழில் வாழ்த்துரைக்க கற்றோர் கரம் கூப்பி வரிசையில் காத்திருக்க தொன்மை புகழ் பண்ணையூராருக்கு  வாழ்த்துப்பா என் கைசுமக்க நெடும்புனல் நன்னீர் தரு இனிமை நுகர்ந்து ஆழ்கடல் அலைகுவி மணலினும் மிக்க நாட்கள் வாழ்ந்தின்பம் காண  வாழ்த்துகிறேன் மகிழ்ந்து  வாழ்க !இன்றுபோல் என்றும்  மகிழ்ச்சிக் கடலில் நனைந்து!

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து தேனிலா தமிழுலா  தேடலா (ல்) பால்நிலா வானுலா வந்து வாழ்த்துச் செய்தி வாசித்தலா கவியுலா சுமந்து தென்றல் காதோடு கவி பாடலா கைபேசி கிண்கிணியென கிண்ணரம் இசைத்து தத்தை மொழி  பேசி ஒற்றைச் சொல்லால்  ஓயாது வாழ்த்தலா உள்ளம் மகிழ்ச்சி கடலிலா கண்டுலா வந்திட விழைதலா(ல்) யானும் வந்தேன் சிற்றுலா இறையருள் இல்லம் நிறைத்தலா (ல்) நலமும் வளமும் கூட்டாட்சி நடத்தலா இன்பம்  நிரந்தர குடியுரிமை வாங்கலா வரையன்ன நெடிய புகழ் காண்டலா வானும் நிலனும் போல  வாழ்தலா(ல்) நிலைத்த நலன் உமக்குரித்தாதலா என்றன் வாழ்த்துலா எழுத்துலாவாக கட்செவி அஞ்சலேறி இல்லம் வந்தது  இன்பச் சுற்றுலா  வாழ்க...வாழ்க...வாழ்க... பல்லாண்டு...பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு இன்றுபோல் என்றும் உவந்து !             - செல்லமாய் ஜெயராஜ்