என்றும் கிழியாது என் பாட்டு
என்றும் கிழியாது என் பாட்டு "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு " என்பார்கள். தன் பிள்ளை தனக்கு எவ்வளவு அழகுடையவனோ அதுபோல ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புகள் மீது ஒரு அலாதி பிரியம் இருக்கும். எந்த ஒரு படைப்பையும் தரம் பிரித்துப் பார்க்க மனம் வராது. ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு சூழலில் எழுதப்பட்டதாக இருக்கலாம். அது அது அந்தந்தக் காலத்தில் பேசு பொருளாக இருந்திருக்கும். அல்லது விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாக இருந்திருக்கும். அதுபோலத்தான் புலவர்களுக்கும் தாங்கள் எழுதும் பாடல்கள் மீது ஒரு கர்வம் உண்டு. எந்தப் பாடலையும் குறைவாக எண்ண இடம் கொடுக்காது. இந்தச் சமூகத்தில் ஒரு புலவர்க்கு கொடுக்கப்படும் இடம் என்ன ? பொருளுக்காகப் பாடுபவர் . வறியவர். இன்று வறியவர் எந்த நிலையில் மதிக்கப்படுகிறாரோ அந்த நிலைக்குத்தான் புலவர்களைப் பற்றிய மக்கள் மனநிலையும் இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மதியுங்கள் மதியாமல் போங்கள். என் பாடல் மீது எனக்கு கர்வம் உண்டு என்கிறார் ஒரு புலவர். சோழ மன்னன் அவையில் ஒருநாள் ஔவை பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு துணிவணிகன் வருகிறார். அவர் தான் நெய...