திருவருகைக்காலமும் மெழுகுவர்த்தியும்
திருவருகைக் கால மெழுகுவர்த்தி கதை "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் வெற்றியுள்ளவரும், தாழ்மையானவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய குட்டியின்மேலும் ஏறிவருகிறார்." (சகரியா 9:9) கிறிஸ்துமஸ் நாட்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. இன்றுமுதல் அட்வென்த் அதாவது திருவருகைக்காலம் தொடங்கிவிட்டது. கிறிஸ்துமஸ் நாட்களுக்கு முன்னர் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் அட்வென்த் ஞாயிறாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் மாமிச வகைகளை உண்ணாமல் இருப்பதுண்டு. கிறிஸ்துவின் வருகை குறித்த தியானங்களையும் பஜனைகளையும் நடத்தி கிறிஸ்து வருகையை உற்சாகமாக எதிர்நோக்கியிருக்கும் காலமாக இந்தத் திருவருகைக் காலம் கருதப்படுகிறது. அன்று விளக்குகளுடன் மணவாளனை எதிர் நோக்க பத்து கன்னியர் காத்திருந்தனர். அவர்களை போல இன்று மெழுகுவர்த்திகள் ஏற்றி மணவாளன் வருகைக்காக நம்மையே தயார் செய்யும் நாட்கள் தொடங்கிவிட்டன. திருவருகைக் காலத்தில் தேவாலயங்களில் ஏற்றப்படும் ஐந்து மெழுக...