Posts

Showing posts from December, 2020

இலக்கை நோக்கி....

Image
  இலக்கை நோக்கி..... இலக்கு இல்லாத பயணம் துடுப்பு இல்லாத படகு சவாரி போன்றது. தடுமாறிப் போவோம்.  தலைகீழ்க் கவிழ்ந்து போவோம். எங்கே போக வேண்டும் என்று தீர்மானிக்காமல் பயணத்தைத்  தொடங்க முடியாது. போக வேண்டிய இடம் எது என்பது முடிவு செய்யப்பட்டால்தான் பயணத்திற்கான அடுத்தக்கட்ட  முயற்சிகளை மேற்கொள்ளமுடியும். ஒரு இலக்கை நிர்ணயிக்கும் முன்னர் பயணத்தைத் தொடங்குவது எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதே தெரியாமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்திருப்பதற்கு  ஒப்பாகும். உட்கார்ந்த பின்னர் இந்தப் பேருந்து  எந்த ஊருக்குப் போகுதோ அந்த ஊருக்கு ஒரு பயணச்சீட்டு தாருங்கள் என்றா கேட்பீர்கள்? வேடிக்கையாக இருக்குதல்லவா! முதலாவது நாம் எங்கே போக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பேருந்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. ஒரு தாத்தா  ஒரு ஊருக்குப் போவதற்காக பேருந்தில் ஏறிவிட்டார். "பேருந்தில் ஏறிய பின்னர் எந்த ஊருக்கு போகணும் என்று பயணச்சீட்டு கேட்க வேண்டும்?" நினைத்து நினைத்துப் பார்க்கிறார்.  ஊர் பெயர் நினைவுக்கு வரவே  இல்லை.   நடத்துநர் வந்து "எங்கே போகணு...

புதுக்கணக்கு எழுதுவோம்

Image
  புதுக்கணக்கு எழுதுவோம்..... எல்லோருடைய உள்ளங்களிலும் உற்சாகம். முகங்களில் நம்பிக்கை ஒளிக் கீற்றுகள். நாளைய விடியல் நல்லதாக விடியாதா என  ஏக்கத்தோடு காத்திருப்பது கண்களில் தெரிகிறது. நாட்டையே ஆட்டிப் படைக்கும் நாசக்கார உயிர்த் தொற்று வரும் ஆண்டாவது நாட்டைவிட்டு ஓடுமா என்ற கேள்வி ஒருபக்கம்..... இரண்டாவது அலை வீசுதாமே அதன் விபரீதங்கள் கடந்த முறையைவிட பயங்கரமாக இருக்குமாமே... ஆண்டவா எங்களைக் காப்பாற்று என்ற வேண்டுதல்களின் ஒலி மறுப்பக்கம்.... இன்னொரு லாக்டவுன் வந்துவிடுமோ.... ஐயோ....அம்மா.... வேண்டாம்டா சாமி... முதல் லாக்டவுனிலிருந்தே எங்களால் இன்னும் எழும்ப முடியவில்லையே நினைத்தாலே ஈரக்குலை எல்லாம் நடுங்குதே...என்ற பீதி இன்னொரு பக்கம்... இந்த வருடமாவது பள்ளிக்குப் போவோமா?  பள்ளி நாட்களில் செய்த குறும்புகளை மறந்து பல மாதங்கள் ஆயிற்று. மறுபடியும் பள்ளி வளாகத்தில் துள்ளித் திரியும் வாய்ப்பு ஏற்படுமா ? என்ற ஏக்கத்தோடு எட்டிப் பார்த்துப் பார்த்துக் கனவுகளோடு கழிந்துபோன நாட்களை நினைத்து நினைத்து மருட்சியோடு இருக்கும் மாணவர்கள் ஒரு பக்கம்... தோழர்களோடு தோளோடு தோள் சேர்த...

மூவகை மாணாக்கர்

Image
    மூவகை மாணாக்கர் உலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு விதிக்கு  உட்பட்டுதான் இயங்கிக்  கொண்டிருக்கின்றன. எழுத்து சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐவகை இலக்கணம் கூறிய பெருமை தமிழுக்கு உண்டு. உயிர் உள்ளவற்றிற்கு இலக்கணம் உண்டு. உயிர் இல்லாதவற்றிற்கும் இலக்கணம் உண்டு. இலக்கணம் என்றதுமே இலக்கண  நூல்களான தொல்காப்பியம் , நன்னூல், யாப்பருங்கலக் காரிகை,தண்டியலங்காரம் இவை யாவும் நம்  மனதில் வந்து போகும். கவிதை எழுதுபவர்கள் மட்டுமே இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்பதல்ல. அனைவருமே இலக்கணம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் இலக்கணம் எழுதிய பெருமை இலக்கண ஆசிரியர்களுக்கு உண்டு.   நன்னூலார் உங்களுக்கும்  எனக்கும்கூட இலக்கணம் எழுதி இருக்கிறார். எங்களுக்கா....ஆச்சரியமாக இருக்கிறதா ? நீங்கள் கட்டுரையைப் படிக்கிறவர்தானே!  அப்படியானால் உங்களுக்குத்தான். உங்களுக்குத்தாங்க... மாணவர்களுக்குத்தாங்க... நாங்கள் மாணவர்கள் இல்லையே ! நாங்கள் எப்போதோ படித்து முடித்து விட்டோம் என்கிறீர்களா?  படித்து முடித்து விட்டவர் எவருமிலர்.  வாழ்நாள் முழுவத...

கண்ணுள்ளார் காதலவராக.....

Image
கண்ணுள்ளார் காதலவராக...... " கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து "                                குறள்   1127 கண்_ விழி உள்ளார் _  இருக்கின்றார் காதலவராக _ காதலராக கண்ணும் _  கண்ணையும் எழுதேம் _ எழுத மாட்டோம் கரப்பாக்கு _  மறைதல் அறிந்து _ தெரிந்து எம் காதலர் கண்ணுக்குள்ளேயே இருப்பதால் அவர் மறைந்துவிடுவார் என்பது அறிந்து எம் கண்ணுக்கு மையும்  தீட்டமாட்டோம் . விளக்கம் :  ஒரு காதலி தன்கண்ணுக்கு மைதீட்டவில்லையாம். அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் ? அவளிடமே கேட்டுவிடுவோமே என்று அவளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவள் கூறிய பதில் என்னவாக இருக்கும் ?  கேட்டால் அசந்து போவீர்கள்.. கேளுங்கள். "காதலர் எப்போதும் என் கண்ணுக்குள்ளேயே  இருக்கிறார்.நான் கண்ணுக்கு மைதீட்டினால் அவர் மறைந்து போவாரே... கொஞ்ச நேரம்கூட  என் கண்ணிலிருந்து அவர் மறைந்து போவதை என்னால் தாங்க முடியாது. ஆதலால் நான் கண்ணுக்கு மைதீட்டமாட்டேன் கண்ணுக்கு மைதீட்டும் ந...

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

Image
உப்பிட்டவரை உள்ளளவும் நினை  "உப்பில்லா பண்டம் குப்பையிலே" உப்பு போடாவிட்டால் உணவில் சுவை இருக்காது. திருமண வீடுகளில் உணவு பறிமாறும்போது இலையில் முதலாவது வைப்பது உப்பு. புகுமனை புகுவிழாவிற்குச் செல்லும்போது உப்பு கொண்டுபோவது வழக்கம். " ஒரு நாளாவது உங்க உப்பை தின்னுருக்கான் இல்லியா... அதற்கு கொஞ்சமாவது நன்றி விசுவாசம் காட்ட வேண்டாமா ? கொஞ்சம்கூட நன்றி கிடையாது...." பல நேரங்களில் நாம் கேட்ட குரல்... கேட்டுக் கொண்டிருக்கும் குரல்.... உப்பைத் தின்றால் நன்றி  இருக்கணுமா? உப்புக்கும் நன்றிக்கும் என்ன தொடர்பு? என்றாவது சிந்தித்தோமா? "கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா? நீ சோத்துல உப்புதானே போட்டு சாப்புடுற...." இந்தக் கேள்விகளும் நம் காதுகளுக்கு வந்திருக்கலாம். சூடு சொரணை வர வேண்டுமானாலும் உப்பு  வேண்டுமாம். சூடு சொரணை என்றால் என்ன ? கார சாரமா இருக்கணும். அதாவது மானஸ்தனாக இருக்கணுமாம். அதை எப்படி எல்லாம் சுற்றி வளைத்து உப்பு போட்டுத் தாராங்க பாருங்கள்.... சோறு என்றால் சுவை வேண்டும். சுவை இருந்தால் மட்டுமே உண்பதில் மகிழ்ச்சி கிடைக்கும். உப...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா....

Image
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா.... மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் "                                   குறள்  : 969 மயிர்  _ முடி நீப்பின் _ நீங்கினால் வாழா _  உயிர் வாழாத கவரிமா _ கவரிமா எனும் ஒரு வகை விலங்கு அன்னார் _ அனையர், ஒத்தவர் உயிர்நீப்பர் _ உயிரை விட்டுவிடுவர் மானம்_  அவமானம் வரின் _ வரும் போது தன் உடம்பிலிருந்து மயிர் வீழ்ந்தால் உயிர் வாழா கவரிமான் போல மானம் உடையவர் அந்த மானம் போவதாயின் உயிர் வாழ மாட்டார். விளக்கம் :  கவரிமா எனப்படும் ஒரு வகை விலங்கு தன் உடம்பிலிருந்து மயிர் உதிர்ந்தாலோ மயிர் மழித்து எடுக்கப்பட்டாலோ உயிர்வாழாதாம். அது போல  தன் தன்மானத்திற்கு ஒரு இழுக்கு ஏற்படும் நிலை வந்தால்  தன்மானமுடையவர் உயிர்  வாழ மாட்டார். நாம் அன்றாடம் செய்தித்தாள்களில்  அவமானத்தால் தற்கொலை செய்து  கொண்டவர்களைப் பற்றி வாசிக்கிறோம்.தனக்கு இப்படிப்பட்ட அவமானம் வந்து விட்டதே என்பதைத்  தாங்கிக் கொள்ள இயலாமல்தான் பல ...

மதியாதார் முற்றம்...

மதியாதார் முற்றம்... மன்னர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைதான் சாசனம். மன்னன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. மன்னர்களால் வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. வாய் தவறி வந்த வார்த்தைகள்கூட ஆணையாகி சில நேரங்களில்   ஆபத்துக்களைத் தந்துண்டு. இங்கே சோழ மன்னர் ஒருவருக்கு திடீரென்று ஒரு ஆசை. புலவர்களை ஏராளமான பாடல்கள் பாட வைத்து அதனைக் கேட்டு இன்புற வேண்டும் என்று நினைக்கிறார். ஆசை இருக்கலாம். தப்பில்லை. அதுவும் இப்பவே வேண்டும் என்று அடம்பிடிப்பது போன்ற ஒரு ஆசை. நாளை காலைக்குள் நாலு கோடிப் பாடல்கள் வேண்டும் என்கிறார் மன்னர். அதையே அவையிலுள்ள புலவர்களுக்கு ஆணையாகப்  பிறப்பித்து விடுகிறார். மன்னன் ஆணையாயிற்றே... அதுவும் நாலு கோடிப்பாடல்... நாளை காலைக்குள் நாலு கோடி பாடலா?     நான் எங்கே போவேன்....எங்கே போவேன்...   யாரிடம் போய் கேட்பேன்....ஐயோ...   எனக்கு வேணும்...எனக்கு வேணும்...   எனக்கு நல்லா வேணும். நாளைக்குள்   நாலுகோடிப்பாடல் எழுத எப்படி முடியும்?     ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்து...

பணிநிறைவுப் பாராட்டு மடல்

Image

சித்தியின் வாழ்த்து

Image

மணநாள் வாழ்த்து

Image

தொடர்புக்கு அப்பால்

Image
தொடர்புக்கு அப்பால் கைபேசி கடிதமானது காதோடு பேச்சு மட்டும் கேட்கலானது! உரக்கப் பேச மறுக்குது உள்ளுக்குள்ளே சிரித்து மகிழலானது! கேலிக்கு மயங்குது கேளிக்கை மட்டுமே விருப்பமானது !  நாழியாயினும் பேசுது  நாட்கணக்காய் வீணடித்துக் கிடக்குது!       கேள்வியை வெறுக்குது  கேட்பவரைத் துறக்க  நினைக்குது!     வெற்றுப் பேச்சுப் பேசுது சற்றும் கூச்சம் இல்லாதிருக்குது! வீதியில் நின்று சிரிக்குது  விவரம் தெரியாமல் பதிலளிக்குது! உதட்டுக்குள் பேச்சு நடக்குது உலகம் கண்களை மறைக்குது! அழுதுத் தொலைக்குது அழுகைக்குக் காரணம் புரியாதிருக்குது!  தன்னிலை மறந்து திரியுது தன்மானம் இழந்து  தவிக்குது!       பெற்றோரை வெறுத்து ஒதுக்குது  பேர்தெரியாத் தொடர்பை  உறவென்குது!    கதைகதையாய்ப் பேசுது கானல் நீர் பின்னால் ஓடுது!      கற்பனையில் வீடு கட்டுது  காணாமல் குடித்தனம்  நடத்துது!     மதி மயங்கி அலையுது மயக்கம் கொண்டு  திரியுது! வலைக்குள் சிக்கிக் கிடக்குது விலக ம...

செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம் ...

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்... செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்துள் எல்லாம் தலை."                                   குறள்  :  411                                    செல்வத்துள் _  செல்வங்களுள்  செல்வம் _  செல்வம் எனப்படுவது  செவிச் செல்வம் _கேள்விச் செல்வம்  அச் செல்வம் _ அந்தச் செல்வம்  செல்வத்துள் _ செல்வங்கள்  எல்லாம் _  எல்லாவற்றிலும்  தலை _    முதன்மையானது   ஒருவனுக்குச் சிறந்த செல்வம் என்று கூறப்படுவது  கேள்வியறிவால் வரும் செல்வமேயாகும். அச்செல்வம் எல்லாச் செல்வத்தை விடவும் தலையாயச்  செல்வமாகக்  கருதப்படும்.  விளக்கம் :  " கற்றலின் கேட்டலே நன்று " என்ற பழமொழி  ஒன்று உண்டு.   கல்வியும் கேள்வியும் சேர்ந்து அறிவுச் செல்வத்தைக் கொடுக்கிறது. வெறுமனே கல்வியால் மட்டும் அறிவைப் பெற்...

வில்லேருழவர் பகை கொளினும்....

 வில்லேருழவர் பகைகொளினும்..... வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை "                 குறள்   :   812 வில் _வில் ஏர் _கலப்பை உழவர் _ உழுபவர் பகை _  பகைமை கொளினும் _ கொண்டாலும் கொள்ளற்க _ கொள்ளாதொழிக சொல்லேர்  உழவர் _  பேச்சுக்கலையில் வல்லவர்  பகை _  பகை வில் தொழில் செய்து போரிடும் பகைவரோடு பகைகொள்ளினும் கொள்ளலாம் ஆனால் சொல்வன்மை மிக்க அறிஞரோடு ஒருபோதும்  பகை கொள்ளக் கூடாது. விளக்கம் :  வில்லுடைய பகைவரைப் பகைத்துக் கொண்டாலும் சொல்வல்லவரோடு பகை கொள்ளக் கூடாது. வீரர்களோடு பகை கொள்ளலாம். விவேகம் உள்ளவரோடு பகை கொள்ளக் கூடாது. வலிமையால் வரும் கேடு பெருமளவில் இருக்காது. ஆனால் அறிஞர்கள், சொல்லாட்சித் திறமிக்க புலவர்களைப் பகைத்துக் கொண்டால் அரசன் நல்லாட்சி நடத்திட முடியாது. அரசனுக்கு நல் ஆலோசனை சொல்லும் திறன்மிக்க அமைச்சர்களையும் மன்னன் ஒருபோதும் பகைத்திடக் கூடாது. அரசனுக்கு மட்டுமல்ல. நமக்கும்  ஏற்ற குறள். அறிவுள்ளவர் கூடவே இருக்கும்போதுதான் நல்வழிகளைக் கேட்டறிந்திட முடியும்...

குற்றியலுகரம்

            குற்றியலுகரம் உகரம்  ஒரு மாத்திரை உடையது.  ஒரு மாத்திரை அளவு குறைந்து  ஒலிக்கும் இடங்களும் உண்டு.   அவ்வாறு உகரம் தன் மாத்திரை அளவில்  குறைந்து ஒலிக்கும் போது  குற்றியலுகரம் என்று அழைக்கப்படும். குறுமை + இயல் + உகரம்  = குற்றியலுகரம் வல்லின மெய்யோடு சேர்ந்த உகரம் சொல்லின் கடைசி எழுத்தாக வரும் போது தன் மாத்திரை அளவான ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலித்தால் அது குற்றியலுகரமாகும். கு, சு , டு , து , பு , று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே குற்றியலுகர எழுத்துகளாக வரும். குற்றியலுகரத்தின் வகைகள் : குற்றியலுகரம் ஆறு வகைப்படும். 1.நெடில் தொடர்க் குற்றியலுகரம் 2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் 3. உயிர்த் தொடர் குற்றியலுகரம் 4. வன்தொடர்க் குற்றியலுகரம் 5. மென்தொடர்க் குற்றியலுகரம் 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பனவாகும்.  1 . நெடில் தொடர் குற்றியலுகரம் :  தனியாக வரும் நெடில் எழுத்துகளை அடுத்து குற்றியலுகர எழுத்துகளான கு ,சு, டு , து , பு  ,று  என்ற எழுத்தில் ஏதாவது ஒன்று வந்தால்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா....

  தீதும் நன்றும் பிறர் தர வாரா.... எங்கேயோ கேட்ட குரல். ஒரு வேளை பள்ளியில் ஆசிரியர் வாசித்திருப்பாரோ? எப்போதோ படித்த வரி. தேர்வுக்காக படித்திருப்போமோ? பத்தோடு பதினொன்று அத்தோடு  இது ஒன்று என விட்ட வரி. நல்ல கருத்துள்ள பாடல்களை அப்படியே அந்தந்த வகுப்புகளில் விட்டுவிட்டு கடந்து போவதுதானே நம்மில் பெரும்பாலோனோரின் வழக்கம். அப்படி விட்டு வந்த வரியாக இருக்குமோ? ஆனால் முதல் வரி மட்டும் உலகம் சுற்றும் வாலிபனாக என்றும் இளமையோடு உலகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு  சபை வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்று நிற்கிறது. தமிழரின் பெருமையே இந்த  ஒற்றை வரியில்தான் அடங்கி இருக்கிறது என்று உரத்தக்  குரலில் உலகம் முழுவதையும் சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எவ்வளவு கனமானது. கருத்தாழமிக்கது  என்பது அடுத்தடுத்த வரிகளை  வாசிக்கும்போதுதான்  புரியும்.இத்தனை நாளும் இந்தப் பாடலை படித்தும் கண்டும் காணாமலும் கடந்து போயிருக்கிறோமே என்று நம்மை கலங்க வைக்கும். நான் எந்தப் பாடலைச் சொல்கிறேன்  என்பது இப்போது உங்களு...

சுரையாழ அம்மி மிதப்பு....

 சுரையாழ அம்மி மிதப்பு.... "என்ன இது?... ஒன்றுமே புரியலியே! நல்லவர்கள் எல்லாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தீயவர்கள் எல்லாம் வசதிவாய்ப்பும் மகிழ்ச்சியும் என்று அமோகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?  நல்லவனுக்கு காலமே இல்லையா?" புலம்பிக்கொண்டிருந்தான் எழிலன். "என்ன எழிலா....ஒரே புலம்பலா இருந்தாப்புல இருக்கு " கேட்டான் நண்பன் அமுதன். "அட போப்போ... உலகத்தில் என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியல...ஒரே குழப்பமாக இருக்கு" "அப்படி என்ன பெரிய குழப்பம்  உனக்கு? " "அதுதாம்பா அந்த மேலத்தெரு தாத்தா வீட்டுல நடந்ததை  நினைத்தால் அப்படியே இதயம் வெடித்து விடும்போல் இருக்கு" "நானும்கூட நினைத்தேன். தங்கமான மனுஷர். அவருக்குப்போய் இவ்வளவு பெரிய துன்பம் !" "அதுதான் ஏன் ....ஏன் என்று  புரியாமல் இன்றுவரை  கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்" "நீ ஒருவன் கவலைப்படுவதால் எல்லாம் சரியாகிவிடுமா... எழும்பு.. எழும்பு ..அப்படியே  மணிமுத்தாறு கால்வாய் கரையோரமாக நடத்துவிட்டு வருவோம் . கொஞ்சம் மனதுக்கு இதமாக இருக்கும்...

முற்றியலுகரம்

  முற்றியலுகரம் என்றால் என்ன? உயிர்க்குறில் எழுத்துகளான அ, இ, ,உ,  எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் ஒரு மாத்திரை  அளவு ஒலிப்பன.  இந்த உகரம் தனக்குரிய ஒரு மாத்திரை   அளவிலிருந்து குறைந்து ஒலிப்பதைக்   குற்றியலுகரம் என்கிறோம்.     வல்லின மெய்யோடு சேர்ந்து வரும்   கு, சு ,டு , து, பு , று என்ற எழுத்துகள்   மட்டுமே  குற்றியலுகர எழுத்தாக வரும்.      கு , சு  , டு  ,  து  , பு  ,  று என்னும்    எழுத்துகள் தனிக்குறிலை அடுத்து வருமானால்   அதன்  ஓசை  அளவு குறைவதில்லை.   அவ்வாறு தன் ஓசை அளவு குறையாது   வரும் எழுத்துகள் முற்றியலுகரம்   எனப்படும்.       நகு       பசு       தடு       எது       மறு          இதில் வரும் உகர எழுத்துகள் தனிக்குறிலை    அடுத்து வருவதால் இது   தன் மாத்திரை அளவில் குறைந்து   வரவில்லை.      மெல...