தொண்ணூறும் தொள்ளாயிரமும்
தொண்ணூறும் தொள்ளாயிரமும் ராகவன் கையைப் பிடித்துக் கொண்டு துள்ளல் போட்டு நடந்து வந்தாள் தாரணி. தாரணி தமிழாசிரியர் ராகவனின் பேத்தி. நேற்றுதான் நகரத்திலிருந்து ஊரிலிருக்கும் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தாள். வந்த நேரத்திலிருந்து தாத்தா ஆற்றைப் பார்க்கப் போகவேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். இன்று காலையிலேயே இருவரும் ஆற்றை நோக்கி நடந்து வந்தனர். வரும் வழியில் ஆற்றோரமாக நிற்கும் பனை மரங்களை எல்லாம் எண்ணிக் கொண்டே வந்தாள் தாரணி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று சொல்லிக் கொண்டு வந்தவள் ஒன்பது என்பதைச் சொன்னதும் தாத்தாவின் முகத்தைப் பார்த்தாள். "என்ன ?"என்றார் தாத்தா. "தாத்தா இந்த எண்களுக்கு எல்லாம் யார் பெயர் கொடுத்தது தாத்தா?" "நம் முன்னோர்கள் எண்களை அடையாளப்படுத்துவதற்காக ஒவ்வொரு பெயரிட்டு வேறுபடுத்தி சொல்லி இருக்கிறார்கள்." "அப்படியானால் இவை இடுகுறிப் பெயர்கள் இல்லையா தாத்தா?" "ஆம்...எந்த ஒரு காரணமும் கருதாது நம் முன்னோர்கள் இட்டு வழங்கியப் பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் " "அப்படியானால் எல்லா எண்களு...