Posts

Showing posts with the label பொறுமை கடலினும் பெரிது -கட்டுரை

பொறுமை கடலினும் பெரிது

பொறுமை கடலினும் பெரிது "பொறுமை கடலினும் பெரியது." "பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார்  காடாள்வார்" பொறுமையின் பெருமையை உணர்த்தும் அருமையான பழமொழிகள். பொறுமைதான் ஒருவரின் தரத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான அளவுகோல். நிதானம் தவறினால் தடுமாற்றம்தான் ஏற்படும். பொறுமையாக சென்றால் தடுமாற்றமும் இருக்காது. தடமாற்றமும் இருக்காது. பொறுமை வெள்ளிக் தட்டில் வைக்கப்பட்டிருக்கும் பொற்பழங்களுக்கு ஒப்பானது என்கிறது பைபிள். அதாவது பொறுமை விலை மதிப்பற்றது. பொறுமை எப்போதும் நன்மையானதை மட்டுமே தரும். பொறுமை இழப்பினால் தான் பல கொலைகளும் தற்கொலைகளும் நிகழ்கின்றன. நடந்து முடிந்த பிறகு ஐயோ.. சற்று பொறுத்திருக்கலாமே! ஆத்திரத்தில் கொலைவரை சென்று விட்டோமே என்று ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் கண்ணீர் விடும் மனிதர்கள்தான் அதிகம். ஆத்திரப்பட்டு என்ன சம்பாதிக்க முடியும்? விலைமதிப்பில்லா நம் வாழ்க்கையைத் தொலைப்பதோடு நமது பிள்ளைகளுடைய வாழ்க்கையையும் தொலைத்துவிடுவோம். சிலருக்கு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடாலடியாக எதுவும் செய்து முடித்துவிட வேண்டும்.அப்படிப்பட்ட ஆத்திரம் அழிவில் கொண்டுவிடும். எதுவும...