முயலின் கனா
முயலின் கனா வானத்தைப் பார்த்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது முயல். வானத்தில் ஓடும் குட்டிக்குட்டி மேகங்கள் தன்னைப் போன்றே இருப்பதைப் பார்த்து வியந்து போனது. எங்கே இந்த மேகங்கள் ஓடுகின்றன? அப்பப்பா...என்ன வெண்மை...என்னைவிட வெண்மையாக இருக்குமோ ? தொட்டுப் பார்த்துவிட ஆசை. ஆனால் முடிகிற காரியமா என்ன? எப்படி வானத்திற்குப் போக முடியும். ஏணி வைத்தால் கூட எட்டாதே. இன்று எப்படியாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும் .ஆசை ஆசையாக மேகத்தையே பார்த்தது. எட்டி நின்று தன் குட்டிக் குறும்பால் சுண்டி இழுத்து என்னை தூங்க விடாமல் செய்கிறதே . இந்த மேகங்களுக்குத்தான் எத்தனை குறும்பு. அப்படியே ஏதேதோ சிந்தனையில் அசந்து தூங்கிப் போனது. சற்று நேரத்தில் ஒரே தாவல்.... வானத்தைப் போய் சேர்ந்தது முயல். பக்கத்தில் மேகக் கூட்டம். ...