கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் யைத் தும்பி காதல் என்று வந்துவிட்டால் அதில் மிகைப்படுத்தல் மிகுந்திருக்கும். காதலன் காதலியைப் புகழ்வதும் காதலி காதலனைப் புகழ்வதும் இன்று நேற்று நடப்பதல்ல. உலகம் தோன்றிய காலம் தொட்டு இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாளையும் இதுதான் நடக்கும். இதைத்தான் நாம் எல்லா அகப்பாடல்களிலும் பார்க்கிறோம். படிக்கிறோம். உள்ளுக்குள்ளேயே சிரித்து மகிழ்கிறோம். பெயர் சுட்டப்படாத யாரோ இருவருக்குள் நிகழ்ந்த காதல் பொதுமையாக நம்முன் வைக்கப்படும் போது அந்த இலக்கிய இன்பத்தை நம்மால் நுகரமுடிகிறது. அந்த உணர்வு அனைவராலும் ஈர்க்கப்படுகிறது. பெயர் சொல்லப்படாமல் தலைவன் தலைவி என்றே சொல்லப்படும் ஒரு பொதுமைத் தன்மை அகப்பாடல்களில் இருப்பதைப் பார்க்கலாம். இப்போது தலைவன் ஒருவன் தன் அன்புக்குரிய தன் தலைவியைப் பார்த்து எப்படி எல்லாம் புகழ்வான் என்று வள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள். " முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு" மூங்கில் போன்ற தோளையுடைய என் தலைவிக்கு தளிரே மேனி. முத்தே பல் .உடல் மணமோ நறுமணம். வேலே மை உண்ட கண...