பொங்கலும் வாழ்த்து அட்டையும்
பொங்கலும் வாழ்த்து அட்டையும் கரும்பு இல்லா பொங்கலும் வாழ்த்து அட்டை இல்லா பண்டிகையும் இனிமை தராது. பண்டிகை என்றாலே கூடவே நினைவுக்கு வருவது அள்ளித் தெளித்துவிடும் கோலமென அங்கங்கே காட்சி தரும் அலங்கரிப்போடு கூடிய வண்ண வண்ண வாழ்த்து அட்டைதாங்க... வாழ்த்துச் சொல்லும் வழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பொதுவாகவே தமிழ் என்றால் வாழ்த்து இல்லாமல் இருக்காது. வாழ்த்து இல்லாமல் காப்பியங்கள் படைக்கப்படவில்லை. ஏன் இலக்கண நூல்கள்கூட வாழ்த்து இல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தைச் சொல்லியதில்லை. வாழ்த்து என்பது இறைவணக்கமாக இருக்கலாம். மொழி வாழ்த்தாக இருக்கலாம். ஏன் இயற்கையை வாழ்த்துவதாகக்கூட இருக்கலாம். வாழ்த்தோடுதான் நாம் எந்தச் செயலையும் தொடங்குகிறோம். வணக்கமும் வாழ்த்தும் இல்லாமல் தமிழும் இல்லை. தமிழர் பண்பாடும் இல்லை. வாழ்த்துவதிலும் வகை வகையாக வாழ்த்துவது நமக்குக் கைவந்த கலை. புலவர்கள் அரசர்களை வார்த்தையால் தோரணம் கட்டி வாயார வாழ்த்தி மகிழ்ந்திருப்பர். அதை வாசித்து..., கேட்டு ...மகிழ்ந்து... வளர்ந்து வந்தவர்கள் நாம். நமக்கு மட்டும...