Posts

Showing posts with the label இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் -கோவூர்கிழார்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் ஆட்சியாளர்கள் என்றால் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முதலிடம் தர வேண்டும். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளைக் கண்டும் காணாமலும் கடந்து போகக்கூடாது. தன்னைவிட மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஆட்சியாளர்களால் தான் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியும். ஆனால் எல்லா ஆட்சியாளர்களும் அப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இல்லை என்றால் விட்டுவிடுவோமா? கேள்வி கேட்கத் தானே நாங்கள் இருக்கிறோம் . திருந்து அல்லது திருத்தப்படுவாய் என்கிறார் ஒரு புலவர். யாரப்பா அந்தப் புலவர்? அறிய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதல்லவா? வாருங்கள் யார் என்று பார்த்துவிடுவோம். மன்னனைவிட மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக அக்கால புலவர்கள் இருந்திருக்கிறார்கள். மன்னன் புகழ் பாடி பரிசில் பெற்றுச் செல்வது மட்டும்  தங்கள் நோக்கம்  அல்ல. மன்னன் தவறு செய்யும்போது இடித்துரைப்பதும் அவர்களை நல்வழிப்படுத்துவதையும் தங்கள் கடமையாக கொண்டிருந்தனர். அதியமான்  ஔவை நட்பு போலவே நலங்கிள்ளிக்கும் கோவூர் கிழார் என்னும் புலவருக்கும் நல்ல  நட்பு உண்டு. மன்...