Posts

Showing posts with the label சுமை

சுமை

Image
               சுமை கதவைத் திறந்து மெதுவாக வெளியில் எட்டிப் பார்த்த நான் படக்கென்று கதவை சாத்திக் கொண்டு கதவின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டேன். "என்ன...யாரும் வாராங்களா?.". பதறியபடி ஓடிவந்தாள்  அக்கா ரமணி. உஷ்....வாயில் கையை வைத்து மெதுவாகப் பேசும்படி எச்சரித்துவிட்டு கதவிடுக்கு வழியாக வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் ஆளுக்கொரு பையோடு  பின்னால் நின்றுகொண்டிருந்த அனைவரும் என்னாயிற்று என்பதுபோல என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்சம் பொறுங்க...கையால்  சைகை காட்டிவிட்டு கதவிடுக்கு வழியாக வெளியில் தலையை நீட்டி  யாராவது வருகிறார்களா என்று நோட்டம் பார்த்தேன். அடுத்து நான் என்ன சொல்லப் போகிறேன் என்று ஒரு கலவரத்தோடு அனைவரும் என் முகத்தையே  பார்த்துக்கொண்டு நின்றனர். அம்மா மட்டும் மறுபடியும் ஒருமுறை  சமையலறைப் பக்கம் சென்று ஏதாவது  விட்டுவிட்டு வந்தோமா என உறுதி  செய்வதற்காக உள்ளே சென்றார். அப்பா எந்தவித சலனமும் இல்லாமல் அப்படியே நின்றிருந்தார். அவரின் கண்களில் ஏதோ ஒன்றைத் தொலைத்துவ...