Posts

Showing posts with the label போதும் பொழுதும்-பிழையின்றி எழுதுவோம்

போதும் பொழுதும்

போதும் பொழுதும்  சில சொற்களை எழுதும்போது நாம் சரியான சொல்லைத் தான் கையாளுகிறமா என்ற ஐயப்பாடு எழுதல் இயல்பு. அதற்குக் காரணம் ஒரே பொருளில் இருவேறு சொற்களைக் கையாள்வதால்  ஏற்படும் குழப்பமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக  'போது 'பொழுது'ஆகிய இரண்டு சொற்களையும் பயன்படுத்தும்போது சில நேரங்களில் குழப்பம்  ஏற்படுவது உண்டு." போது என்று எழுத வைண்டுமா? பொழுது என்று எழுத வேண்டுமா? எது சரி? எது தவறு? இப்படிச் சர்ச்சைகள் மனதிற்குள்  எழுந்த நாட்கள் உண்டு.   பொழுதின் சுருங்கிய வடிவம்தான் போது என்று வாதிடுவர் ஒரு சிலர். ஆனால் போதிய சான்றுகள் தரப்படாததால் இன்றுவரை நாம் எழுதும்போது குழப்பத்திலேயே ஏதாவது ஒன்றை  எழுதி வைத்திருப்போம். போது என்றால் மலரும் பருவத்தில் இருக்கும் மலர். போது என்பதன் பொருள் செவ்வி காலம் தக்கசமயம் வாழ்நாள் பொழுது என்று பல பொருளில் கையாளப்பட்டு வருதலைக் காணலாம். போது என்பது பெயர்ச்சொல்லாக வரும்போது மலர் என்ற பொருளில் வருகிறது. "இங்கே வரும்போது "என்ற சொல்லில் 'போது' என்ற சொல்   தக்கசமயத்தில் என்ற பொருளில் கையாளப்படும். "வாழும்போது" என்று எழு...