பத்துப்பாட்டு நூல்கள்
பத்துப்பாட்டு நூல்கள் சங்க இலக்கிய நூல்களுள் முதலாவது வரிசையில் வைத்து எண்ணப்படுவது பத்துப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்கள் யாவை? அவற்றை எழுதியவர்கள் யார் யார்? அந்தப் பாட்டுடைத் தலைவர்கள் யார் யார் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 1. திருமுருகாற்றுப் படை 2.பொருநராற்றுப் படை 3.சிறுபாணாற்றுப் படை 4.பெரும்பாணாற்றுப் படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக் காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9..பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் ஆகிய பத்தும் பத்துப்பாட்டு நூல்களாகும். இவற்றுள், 1.புறப்பொருள் பற்றிய நூல்கள்: திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி ஆகிய ஆறு நூல்களுமாகும். 2.அகப்பொருள் பற்றிய நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு பட்டினப்பாலை முல்லைப்பாட்டு ஆகிய மூன்று நூல்களுமாகும். 3. அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் விரவிய நூல்: நெடுநல்வாடை என்ற ஒரு நூல் மட்டும். பத்துப்பாட்டு பாடல்கள் எழுதியவர்கள் மற்றும் பாட்டுடைத் தலைவர்கள். திருமுருகாற்றுப்படை- நக்கீரர் பாட்டுடைத் தலைவன் முருகன் பொருநராற்றுப்படை- முடத்தாமக் ...