Posts

Showing posts with the label சுமை - சிறுகதை

சுமை

                சுமை கதவைத் திறந்து மெதுவாக வெளியில்  எட்டிப் பார்த்த நான் படக்கென்று கதவை  சாத்திக் கொண்டு கதவின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டேன். "என்ன...யாரும் வாராங்களா...?" என்றாள் அக்கா ரமணி. உஷ்....வாயில் கையை வைத்து மெதுவாகப் பேசும்படி எச்சரித்துவிட்டு கதவிடுக்கு வழியாக வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் பையோடு புறப்படத் தயாரான அனைவரும் பையைக் கீழே வைத்துவிட்டு எனது  சிக்னலுக்காக காத்திருந்தனர். அம்மா மறுபடியும் ஒருமுறை சமையலறைப் பக்கம் சென்று ஏதாவது விட்டு விட்டுவிட்டு வந்தோமா என உறுதி செய்து கொண்டிருந்தார். அப்பாவின் கண்கள் எதையோ இழந்துவிட்டு தேடுவதுபோல  தேடிக் கொண்டிருந்தது. முகம் வெளிறிப் போய் அப்பாவைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. "சீக்கிரம் பாருடா...நேரம் ஆகிடப் போவுது." ..என்று அவசரப்படுத்தினான் கடைக்குட்டித் தம்பி ரமேஷ். அவனுடைய குரலில் முதன்முதலாக இன்பச்சுற்றுலா செல்லும் சிறுவனின் உற்சாகம் இருந்தது. அவனைப் பொறுத்தமட்டில் இது  இன்பச் சுற்றுலாதான். அடிக்கடி அம்மாவிடம் "எங்காவது  பேருந்தி...